60 போட்டிகளைக் கொண்ட 9ஆவது ஐ.பி எல் தொடரில் பல வீரர்கள், குறிப்பாக அவுஸ்திரேலியா அணி வீரர்கள் உபாதை காரணமாக இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளார்கள். இதற்கிணங்க மீண்டும் ஒரு அவுஸ்திரேலியா வீரரான கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷும் தற்போது முதுகு காயத்துடன் நாடு திரும்பவுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியின் போதே இவர் உபாதைக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று நடைபெற்ற குஜராத் அணியுடனான போட்டியில் அவர் விளயாடி இருந்தாலும் வெறுமனே ஒரு ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். ஆனாலும் அப்போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருந்தது.
இவ்வருட ஐ.பி.எல் பருவத்தில் மொத்தமாக 6 போட்டிகளில் விளையாடிய ஷோன் மார்ஷ் ஒரு அரைச்சதம் அடங்கலாக 31.80 என்ற துடுப்பாட்ட சராசரியோடு 159 ஓட்டங்களைப் பெற்று இருந்தார்.
எதுஎவ்வாறாயினும் அணிகளுக்கான தரவரிசையில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் பங்குபற்றி இரண்டே இரண்டு வெற்றிகளை மட்டும் பெற்று கடைசி இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்