இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்ற அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப், இந்தப் பருவகாலத்திற்கான (2021) ஐ.பி.எல். தொடரில் தமது பெயரினை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இலங்கை லெஜன்ட்ஸ் அணியில் இணையும் அர்னோல்ட், குலசேகர
ஐ.பி.எல். தொடரின் கடந்த பருவகாலத்தில் கே.எல். ராகுலின் தலைமையில் வழிநடாத்தப்பட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நீண்ட காலத்திட்டம் ஒன்றின் பின்னரே புதிய பெயர் மாற்றத்துக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள பெயர் தொடர்பில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்றினை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட்டுக்கு உயிர்கொடுப்பதே எமது பணி – முரளிதரன்
அதேவேளை, பஞ்சாப் கிங்ஸ் என்னும் பெயரிலேயே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் வீரர்கள் ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் அடங்கலாக மொத்தம் 292 வீரர்கள் பங்கெடுக்கவிருப்பதோடு, வீரர்கள் கொள்வனவிற்கு இந்திய நாணயப்படி சுமார் 200 கோடி ரூபாய்கள் பயன்படுத்தப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<