மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் கீரன் பொல்லாரட் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான IPL தொடர் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிடுவதற்கான இறுதித்திகதியான இன்று (15) கீரன் பொல்லாரட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
>> T20 உலகக்கிண்ண பரிசுத்தொகை! ; இலங்கை அணிக்கு எவ்வளவு தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் அணியின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலிலிருந்து கீரன் பொல்லாரட் நீக்கப்பட்டுள்ளார் காரணத்தால், இவர் ஓய்வை அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வீரராக IPL தொடரிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என அணி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி முதன்முறையாக அணியொன்றின் பயிற்றுவிப்பாளராக கீரன் பொல்லாரட் செயற்படவுள்ளார்.
IPL தொடரிலிருந்து வீரராக கீரன் பொல்லார்ட் நீக்கப்பட்டாலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ILT20 தொடரில் மும்பை நிர்வாகத்துக்கு சொந்தமான மும்பை எமிரேட்ஸ் அணிக்காக இவர் விளையாடுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
>> உபாதைகள் துரதிஷ்டமா? ; மாற்றுத்திட்டத்தை நோக்கும் இலங்கை?
கீரன் பொல்லார்ட் கடந்த 2009ம் ஆண்டு முதல் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இவர், வேறு எந்த அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 189 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 3412 ஓட்டங்களையும், 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<