T20 அரங்கில் 30ஆவது அணிக்காக விளையாடவுள்ள பொல்லார்ட்

177

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கிரென் பொல்லார்ட் இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டி20 போட்டிகளில் முன்னணி வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற 32 வயதான கிரென் பொல்லார்ட் தற்போது மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு T20I …….

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்காக இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்டில் நொர்தம்ப்டன்ஷெயார் அணியில் விளையாடுவதற்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவர் விளையாட இருக்கும் 30ஆவது டி20 அணியாகும்.   

பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடிவரும் பொல்லார்ட், இதுவரை ஒட்டுமொத்தமாக 499 போட்டிகளில் விளையாடி 9,966 ஓட்டங்களைக் குவித்துள்ளார்

நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக விளையாடுவது குறித்து பேசிய அவர், “இங்கிலாந்து கழகமொன்றுக்கான டி20 போட்டித் தொடரொன்றில் விளையாடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, நொர்தம்ப்டன்ஷெயார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ரீப்ளே கருத்து வெளியிடுகையில், “கிரென் பொல்லார்ட் பற்றி நான் பலரிடம் பேசியுள்ளேன்.

எல்லோரிடமிருந்தும் அவர் ஒரு வெற்றியாளர் என்பதுதான் பதிலாக கிடைக்கும். டி20 போட்டிகளில் அருமையான பல சாதனைகளை படைத்துள்ள அவர் ஒரு சிறந்த போட்டியாளர்” என கூறினார்.

முன்னதாக 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சமர்செட் அணிக்காக பொல்லார்ட் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நொர்தம்ப்டன்ஷெயார் அணிக்காக இம்முறை பொல்லார்ட் 8 போட்டிகளில் விளையாடவுள்ளார். இதன் முதல் போட்டி எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி டர்ஹம் அணிக்கெதிராக நடைபெறவுள்ளது

இதேவேளை, நொர்தம்ப்டன்ஷெயார் அணி 2013 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் டி20 பிளாஸ்ட் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டதுடன், கடந்த பருவத்தில் 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<