இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமட்டுக்கு, சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) விதிமுறையை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டுக்காக உத்தியோகபூர்வ எச்சரிக்கையுடன் கூடிய, தடைப் புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
2-1 என ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி
இன்று (29) மும்பையில் நடைபெற்ற…
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமட், சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவரது அபார பந்து வீச்சின் உதவியுடன் இந்திய அணி 224 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், அணியின் 14வது ஓவரை வீசிய கலீல் அஹமட், மேற்கிந்திய தீவுகள் அணியின் மார்லன் சாமுவேல்ஸின் விக்கெட்டினை வீழ்த்தினார். அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட்டுவந்த நிலையில், நிதானமாக 18 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், ரோஹித் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
மார்லன் சாமுவேல்ஸின் விக்கெட்டினை வீழ்த்திய கலீல் அஹமட் கடுமையான வார்த்தை பிரயோகங்களுடன் அவரை வழியனுப்பி வைத்தார். இதனால், ஐசிசியின் முதலாம் நிலை குற்றத்தின் 2.5ம் சரத்தின் படி, சர்வதேச போட்டிகளின் ஆட்டமிழப்பின் போது, துடுப்பாட்ட வீரர் அல்லது வீராங்கனையை கடுமையான வார்த்தை பிரயோகங்கள், இழிவுப்படுத்தும் சைகைகள் மற்றும் ஆக்ரோஷமான எதிர்ப்புகளை வெளிப்படுத்தல் என்ற விதிமுறையின் கீழ், கலீல் அஹமட் மீது நடுவர்கள், போட்டி மத்தியஸ்தரிடம் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இளையோர் ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியிலும் மொஹமட் சமாஸ்
சுற்றுலா பங்களாதேஷ்…
பின்னர் போட்டி மத்தியஸ்தரான கிரிஸ் புரோட் மேற்கொண்ட விசாரணையின் போது, கலீல் அஹமட் குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால், அவருக்கு உத்தியோகபூர்வ எச்சரிக்கையை விடுத்த போட்டி மத்தியஸ்தர், ஒரு தடைப் புள்ளியையும் வழங்கினார். இதேவேளை, கலீல் அஹமட் குற்றத்தை ஏற்றுக்கொண்டதுடன், நடுவர்களும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால், மேலுமொரு உத்தியோகபூர்வ விசாரணை தேவையில்லை எனவும், போட்டி மத்தியஸ்தர் சுட்டிக்காட்டினார்.
இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்குமான ஐந்தவாதும், இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க