அவுஸ்திரேலிய – பாகிஸ்தான் அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ணப்போட்டி இன்று (11) நடைபெறும் நிலையில், இப்போட்டிக்கு முன்னதான பயிற்சிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சொஹைப் மலிக் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் பங்கெடுக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>>இங்கிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து
இந்த வீரர்கள் இருவருக்கும் சளியுடன் கூடிய சிறுகாய்ச்சல் (Flu) ஒன்று இருந்ததன் காரணமாகவே பயிற்சிகளில் பங்கெடுக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனினும், இந்த வீரர்கள் இருவருக்கும் மேற்கொண்ட கொவிட்-19 பரிசோதனைகளில் கொவிட்-19 தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB), இந்த வீரர்கள் இருவரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னர் பூரண உடற்சுகம் பெறுவார்கள் என எதிர்பார்க்கின்றது.
Shoaib Malik and Mohammad Rizwan are suffering from flu, ahead of the T20 World Cup semi-final. Neither player took part in practice today but the team management are hopeful that both will be fit for the match against Australia #T20WorldCup #PAKvAUS
— Saj Sadiq (@SajSadiqCricket) November 10, 2021
T20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதி மோதலாக அமைகின்ற பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி, இன்று (11) துபாய் நகரில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் T20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தினை வீழ்த்தியிருந்த நியூசிலாந்து T20 உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<