ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தகுதிகாண் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் கெவின் சின்கிளைர் இணைக்கப்பட்டுள்ளார்.
உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடி வரும் மே.தீவுகள் அணி சுபர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள போதும், ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
>> புதிய சாதனையை நிலைநாட்டவுள்ள நதன் லயன்
குறிப்பிட்ட இந்த தோல்விகள் காரணமாக புள்ளிகளின்றி சுபர் சிக்ஸ் சுற்றுக்கு சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அணியில் இணைக்கப்பட்டிருந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளர் யானிக் கரியா வலைப்பயிற்சியின் போது உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். இவரின் முகத்தில் பந்து தாக்கியதில் மூக்கு எழும்பு பகுதியில் இவருக்கு உபாதை ஏற்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே இவரின் உபாதை காரணமாக மற்றுமொரு இடதுகை சுழல் பந்துவீச்சாளரான கெவின் சின்கிளைர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அணியில் மாற்று வீரரை இணைப்பதற்கான அனுமதியை உலகக்கிண்ண தகுதிகாண் தொடருக்கான தொழிநுட்பக் குழு வழங்கியுள்ளதாக மே.தீவுகள் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மே.தீவுகள் அணி தங்களுடைய முதல் சுபர் சிக்ஸ் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்வரும் முதலாம் திகதி (சனிக்கிழமை) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<