இந்த ஆண்டுக்கான (2025) இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் பயிற்சி வழிகாட்டியாக (Mentor) இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி நட்சத்திரம் கெவின் பீடர்சன் செயற்படவிருக்கின்றார்.
>>சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் பக்கார் சமான்<<
அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான 44 வயது நிரம்பிய பீடர்சன் தனது பயிற்சி வழிகாட்டிப் பணிகளை டெல்லி கெபிடல்ஸ் அணியின் பயிற்சிக் குழாத்தில் காணப்படும் ஹேமங் பதானி (தலைமைப் பயிற்சியாளர்), முனாப் படேல் (பந்துவீச்சு பயிற்சியாளர்) ஆகியோருடன் இணைந்து புதிய பருவத்தில் தொடரவிருக்கின்றார்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு இறுதியாக IPL போட்டிகளில் வீரராக ஆடிய கெவின் பீடர்சன் முதன் முறையாக பயிற்சியாளர் பொறுப்பினை தன்னகத்தே எடுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கெவின் பீடர்சன் டெல்லி அணியின் வழிகாட்டிகளில் ஒருவராக இணைந்த விடயம், டெல்லி கெபிடல்ஸ் அணியின் உத்தியோகபூர்வ இன்ஸ்டாக்ரம் கணக்கு வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
https://www.instagram.com/p/DGknURMTzS4/
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<