ஹெவலொக் விளையாட்டுக் கழகம் மற்றும் CH & FC அணிகளுக்கிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி தொடரின் நான்காம் வாரப் போட்டியொன்றின்போது, இளம் நட்சத்திர வீரர் கெவின் டிக்சன் தாடை உபாதை காரணமாக போட்டியின் இடைநடுவில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
இலங்கை தேசிய அணி வீரரான டிக்சன், அப்போட்டியில் விங் நிலை வீரராக களமிறங்கியிருந்தார். CH & FC அணியின் ட்ரை கோட்டின் அருகில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அவர் உபாதைக்கு உள்ளானார். இதன்போது மருத்துவ நிபுணர்கள் உடனடியாக முதலுதவிச் சிகிச்சைகளை வழங்கியதுடன், பின்னர் டிக்சன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த போட்டியை மீண்டும் பார்வையிட:
இச்சம்பவம் போட்டியின் 46ஆவது நிமிடத்தில் இடம்பெற்றது. சம்பவத்தையடுத்து ஆடுகளத்தில் அவரை சோதனைக்கு உட்படுத்திய மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே டிக்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது தாடை பலத்த காயத்திற்கு உள்ளாகியிருந்ததுடன், அறுவைச் சிகிச்சையின் பின்னர் தற்போது குணமடைந்து வருகின்றார். கெவின் டிக்சனின் உபாதையானது ஹெவலொக் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு டிக்சன் எவ்வித போட்டிகளிலும் பங்குகொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஹெவலொக் அணியானது ரமேஷ் பெர்னாண்டோ அல்லது சாமர தாபரே ஆகிய வீரர்களுடன் அடுத்த போட்டிகளுக்காக களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஹெவலொக் அணிக்கு மட்டுமன்றி இலங்கை தேசிய அணிக்கும் முக்கிய வீரராக காணப்பட்ட கெவின் டிக்சன் விரைவாக குணமடைந்து மீண்டும் தனது சிறப்பாட்டத்தை தொடர்வார் என ThePapare.com ஆகிய நாமும் எதிர்பார்க்கின்றோம்.
தமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட்
இலங்கை அணியின் முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட்..