இலங்கை அணிக்கு எதிராக நாளை (13) ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முற்றுமுழுதாக தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த காத்திருப்பதாக தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மஹாராஜ் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இலங்கையின் தோல்வி ஓட்டம் முடிவுக்கு வருமா?
சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் சர்வதேச அரங்கில்….
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை டேர்பனில் ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற தொடர்களில் வேகப்பந்து வீச்சுக்கு தடுமாறிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள், காகிஸோ ரபாடா, டேல் ஸ்டெய்ன், வெரொன் பில்லெண்டர் மற்றும் டுவான் ஒலிவீர் ஆகிய மற்றுமொரு வேகப்பந்து வீச்சு கூட்டணியின் சவாலை எதிர்கொள்ளவுள்ளனர்.
கடந்த வருடம் தங்களுடைய சொந்த மைதானத்தில் தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, 2-0 என தொடரை கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் குறித்த டெஸ்ட் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடவுள்ளதாக கேஷவ் மஹாராஜ் தெரிவித்துள்ளார். முதல் போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது நாட்டுக்கு எந்தவொரு அணி வருகைத் தந்தாலும், முற்றுமுழுமதாக எமது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு முயற்சி செய்வோம். அதிலும் முக்கியமாக இலங்கை அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை வெற்றிக்கொள்வதற்கு நாம் முழு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். காரணம், கடந்த வருடம் நாம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, டெஸ்ட் தொடரை அவர்களுடைய சொந்த மண்ணில் வெற்றியீட்டியிருந்தனர்”
ஆனால், இம்முறை அவர்கள், எமது சொந்த மண்ணில் விளையாடவுள்ளனர். அதனால், நாம் எம்முடைய சாதகத்தன்மையை பயன்படுத்தி இலங்கை அணிக்கு பதிலடி கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். எந்வொரு தொடரை எடுத்தாலும், வைட்வொஷ் முறையில் கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாகும். அதே போன்றுதான் நாமும் நினைக்கிறோம். அத்துடன், இது எமது கோட்டை, எங்களால் எதிரணிகளுக்கு அதிக சவால்களை கொடுக்க முடியும்”
இலங்கை அணியை பொருத்தவரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள டேர்பன் மைதானமானது அதிக சவால் மிக்க மைதானம் என்பதை கூறமுடியாது. இந்த மைதானத்தில் இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெற்றிருக்கிறது.
நான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு
இலங்கை கிரிக்கெட் அணிக்குள் நிலவி வருகின்ற …
அதேநேரம், பெப் டு ப்ளசிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணி, தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை வெற்றிக்கொண்டுள்ளது. எனினும், டேர்பன் மைதானத்தில் இறுதியாக விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில், 6 தோல்விகளை சந்தித்து மோசமான சாதனையை கைவசம் வைத்துள்ளது. எதுவாக இருந்தாலும், இம்முறை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கேஷவ் மஹாராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“சில விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மனதளவிலும் மாற்றங்கள் வேண்டும். இம்முறை டேர்பன் மைதானத்தில் விளையாடவுள்ள டெஸ்ட் அணியானது, கடந்த காலங்களை விட சற்று வேறுப்பட்டது. அதனால், இம்முறை எல்லையை கடந்து விடுவோம் என்ற நம்பிக்கை எமது இரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்றார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (13) டேர்பனில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானத்தில் , இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.