உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற 18ஆவது கொழும்பு சர்வதேச மரதன் (LSR Marathion) ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கென்யாவின் ஜேம்ஸ் கலாம் சம்பியனாக தெரிவானார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 2 மணித்தியாலங்கள் 21.52 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.
கொழும்பு மரதனில் கென்ய வீரர்களுக்கு சவால் கொடுத்த இலங்கை வீரர்கள்
“கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன்” அமைப்பு ஏற்பாடு செய்த 17ஆவது சர்வதேச கொழும்பு மரதன் (LSR Colombo Marathon) ஓட்டப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும்…
நீர் மற்றும் இயற்கை சார்ந்த விளையாட்டுகளுக்கு முன்னோடியாக திகழும் கொழும்பு ஸ்போர்ட்ஸ் ரைஸன் அமைப்பு ஏற்பாடு செய்த 18ஆவது சர்வதேச கொழும்பு மரதன் ஓட்டப்போட்டி நேற்று (07) நடைபெற்றது. இலங்கையில் வருடந்தோறும் நடைபெற்றுவருகின்ற ஒரேயொரு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியான எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் ஓட்டப் போட்டியில் உள்ளூர் மற்றும் 45 சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 6,000 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் 300இற்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் கென்ய நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிகளைப் பதிவு செய்திருந்த நிலையில், இலங்கை வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தி முதல் 10 இடங்களுக்குள் போட்டியை நிறைவுசெய்திருந்தமை சிறப்பம்சமாகும்.
பௌத்தாலோக்க மாவத்தையில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் ஆரம்பமாகிய இம்முறை போட்டியானது 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக அமைந்தது. இதன்படி, பொரளை, தெமட்டகொடை, பேலியகொடை, வத்தளை, ஹெமில்டன் கால்வாயை சுற்றி, பமுனுகம, தலஹேன, பிட்டிபன வழியாக நீர்கொழும்பு கடற்கரையை வந்தடைந்தது இந்தப் போட்டி.
இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற கொழும்பு மரதனில் ஆண்கள் சம்பியனாகிய கென்ய நாட்டு வீரர் ஜேம்ஸ் கலாம் இம்முறையும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த முறை போட்டியை 2 மணித்தியாலங்கள் 23.37 செக்கன்களில் நிறைவு செய்த கலாம், இம்முறை போட்டியை 45 செக்கன்கள் முன்னிலையுடன் நிறைவுசெய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதிவேக வீரராகும் வாய்ப்பை தவறவிட்ட மொஹமட் சபான் மற்றும் சபியா
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வருடத்தின் அதிவேக பாடசாலை வீரர்களைத் தெரிவு செய்கின்ற 100 மீற்றர் ஓட்டப்பந்தயப் போட்டிகளின் இறுதிப்…
குறித்த போட்டியில் கென்ய நாட்டைச் சேர்ந்த ஸ்டீவன் முன்கதியா (2 மணி. 21.58 செக்.) இரண்டாவது இடத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த பீட்டர் கேடர் (2 மணி. 22.30 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், இலங்கை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அமில சனத் குமார, 2 மணித்தியாலமும் 25.35 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அத்துடன், கடந்த வருடம் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுரங்க குணசேகரவுக்கு இம்முறை போட்டிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதற்காக அவர் 2 மணித்தியாலம் 27.07 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.
இதேநேரம், பெண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த மாங்கிரட் ஜுகுனா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 2 மணித்தியாலமும் 52.54 செக்கன்களில் கடந்தார். போட்டி முழுவதும் அவருக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த அதே நாட்டைச் சேர்ந்த எமிலி ஜெப்கோச் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் 2 மணித்தியாலமும் 53.49 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்தார்.
இந்த நிலையில், 2 மணித்தியாலமும் 53.56 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த மதுமாலி பெரேரா மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த காலப்பெறுமதியாகும். இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த என்.கே பெர்னாண்டோ, எல்.ஏ போகஹவத்த ஆகிய வீராங்கனைகள் முறையே 4ஆவது, 5ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா சம்பியனாக மேல்மாகாணம்
எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 34 ஆவது அகில இலங்கை .
இதுஇவ்வாறிருக்க, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களுக்கு 2500 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் 430, 000) பணப் பரிசாக வழங்கப்பட்டதுடன், இலவச விமானப் பயணச்சீட்டும் வழங்கி வைக்கப்பட்டன. அதில் 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு முறையே 1500 மற்றும் 1000 டொலர்களும், 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களைப் பெற்ற வீரர்களுக்கு முறையே 500 மற்றும் 200 டொலர்களும் பணப்பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, 21 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த டி.ஜி.டி சந்தருவன் முதலிடத்தைப் பெற்றுக்கெண்டார். போட்டியை அவர் ஒரு மணத்தியாலமும் 09.37 செக்கன்களில் நிறைவு செய்தார். பெண்கள் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த எமெண்டா சேங் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலமும் 25.13 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
இதில் இரண்டாவது இடத்தை மாத்தளையைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி பெற்றுக் கொண்டார். போட்டியை ஒரு மணித்தியாலமும் 27.23 செக்கன்களில் அவர் கடந்தார். கடந்த வருடம் முழு மரதன் ஓட்டப் பிரிவில் பங்கேற்றிருந்த அவர், நான்காவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<