தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்கா அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 T20i போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 7ஆம் திகதி டிரினிடாட்டில் ஆரம்பமாகவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை கயானாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியானது அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கிரெய்க் பிராத்வைட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உதவித் தலைவராக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஷுவா டா சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இந்த அணியில் நட்சத்திர வீரர் அல்ஸாரி ஜோசப் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகிய 2 வீரர்களுக்கும் இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் தொடரின் போது கெவின் சின்க்ளேர் உபாதைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்
- வனிந்து ஹஸரங்கவை இழக்கும் இலங்கை அணி
- அயர்லாந்து தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு
இதனிடையே, முழங்கால் உபாதை காரணமாக அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பிடிக்காமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அத்துடன், ஷமார் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜேசன் ஹோல்டர், கேசி கார்டி, அலிக் அதானாஸ் உள்ளிட்ட வீரர்களும் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விபரம்:
கிரெய்க் பிராத்வைட் (தலைவர்), ஜோஷுவா டா சில்வா, அலிக் அதானாஸ், கேசி கார்டி, பிரையன் சார்லஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜேசன் ஹோல்டர், கேவாம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், ஷமார் ஜோசப், மிகைல் லூயிஸ், குடகேஷ் மோட்டி, கெமார் ரோச், ஜேடன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கன்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<