இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 19 வயதிற்குட்பட்ட பிரிவு இரண்டு (டிவிசன் 2) அணிகளுக்கிடையிலான இப்பருவகாலத்திற்கான (2017/18) கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டியொன்றில் கேகாலை வித்தியாலய அணியை வீழ்த்திய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி தொடரில் மேலும் ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அபினாஷின் சகலதுறை ஆட்டத்தினால் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு மற்றொரு வெற்றி
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இடம்பெறும் இப்பருவகாலத்திற்கான பிரிவு இரண்டு (டிவிசன் 2) அணிகளுக்கிடையிலான 2017/18 கிரிக்கெட் தொடரின் குழு நிலைப் போட்டியொன்றில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணியை வீழ்த்திய யாழ்ப்பாணம் சென்.
பிரிவு இரண்டினுடைய முதலாவது சுற்றுப் போட்டிக்காக குழு Aஇல் போட்டியிட்டுவரும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி கேகாலை வித்தியாலய அணியினை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கேகாலை வித்தியாலய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 29 ஓட்டங்களிற்கு 03 விக்கெட்டுக்களை பறிகொடுத்தபோதும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உமேஷ் தாரக 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
ஒரு முனையில் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக சரிக்கப்பட்டபோதும், 5ஆம் இலக்கத்தில் களம்புகுந்த மதுசன் குணசிங்க (113) சதத்தினைப் பெற்றுக்கொடுத்து அணியினை வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு இட்டுச்சென்றார். இறுதியாக 55.1 ஓவர்களினை எதிர்கொண்ட கேகாலை வீரர்கள் 224 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் அபினாஷ் 4 விக்கெட்டுக்களையும், வேகப்பந்து வீச்சாளர்கள் கபில்ராஜ், டினோசன் ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய யாழ்ப்பாண வீரர்கள் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டினை பறிகொடுத்தனர். இரண்டாவது விக்கெட்டிற்காக செரோபன்(21), அபினாஷ் இணை 76 ஓட்டங்களினை பகிர்ந்தது.
முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் புதிய மாற்றங்களுடன் இலங்கை
இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு (2017) எப்படியாவது மறக்கடிக்கப்பட வேண்டிய ஒரு மோசமான கனவு போன்று அமைந்திருந்தது.
முதலாவது நாள் ஆட்டத்தினை 163/3 என பலமான நிலையில் நிறைவுசெய்த சென். ஜோன்ஸ் அணியினர், இரண்டாவது நாளின் ஆரம்பத்திலேயே அபினாஷின் (88) விக்கெட்டினை இழந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களில் டினோசன்(28), சௌமியன்( 21) தவிர ஏனையோர் ஏமாற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியால் 215 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் தரிந்து சந்தருவான் 5 விக்கெட்டுக்களையும், உமேஷ் தாரக மற்றும் சச்சின் நிமேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
09 ஓட்டங்கள் முன்னிலையில் நம்பிக்கையுடன் களமிறங்கிய கேகாலையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கபில்ராஜ்ஜின்(5) பந்து வீச்சில் சுருண்டனர். தொடர்ந்து யதுசன்(3) மற்றும் அபினாஷ்(2) ஆகியோரும் கைகொடுக்க கேகாலை வித்தியாலய அணியினர் 84 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். அதிகபட்சமாக சந்தருமிஷக 20 ஓட்டங்களை சேகரித்திருந்தார்.
இதன் காரணமாக 94 என்ற இலகு வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய யாழ். வீரர்கள் அணித் தலைவர் யதுசனின் அரைச்சதத்தின் உதவியுடன் 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை அடைந்தனர்.
யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்து மைதானம்
16ஆவது பொன். விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் 51:63 என்ற.. கூடைப்பந்தாட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் வைத்தியர் கோபிசங்கர் அவர்களது தலைமையில் நேற்று (12) இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மே ளனத்தின் பிரதிநிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசனாதன் அவர் களும்,
இன்றைய தினம் தமது ஆறாவது குழுநிலைப் போட்டியில் விளையாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் நான்காவது வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். அதேவேளை, தலா ஒவ்வொரு போட்டியினை சமநிலையிலும், தோல்வியிலும் நிறைவு செய்துள்ளனர்.
அவர்கள் தமது இறுதிக் குழுநிலைப் போட்டிக்காக களனி ஸ்ரீ தர்மலோக கல்லூரியை எதிர்வரும் வாரங்களில் எதிர்கொள்ளவுள்ளனர்.
போட்டிச் சுருக்கம்
கேகாலை வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) 224 (55.)1 – மதுசன் குணசிங்க 113, உமேஷ் தாரக 48, மேர்வின் அபினாஷ் 4/49, கனகரட்ணம் கபில்ராஜ் 3/66, தெய்வேந்திரம் டினோசன் 2/23
சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 215 (61.4) – மேர்வின் அபினாஷ் 88, தெய்வேந்திரம் டினோசன் 28, நாகேந்திரராசா சௌமியன் 25, தேவதாஸ் செரோபன் 21, தரிந்து சந்தருவான் 5/73, உமேஷ் தாரக 2/43, சச்சின் நிமேஷ் 2/51
கேகாலை வித்தியாலயம் (இரண்டாம் இன்னிங்ஸ்) 84 (38.1) – சந்தரு மிஷக 20, கனகரட்ணம் கபில்ராஜ் 5/40, வசந்தன் யதுசன் 3/26
சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) 94/2 (22) – வசந்தன் யதுசன் 66*
போட்டி முடிவு – 8 விக்கெட்டுக்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி