இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கேதர் ஜாதவ் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கேதர் ஜாதவ் இறுதியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்ததார். அதேநேரம் 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத்துக்கான இந்திய குழாத்திலும் இடம்பெற்றிருந்தார்.
>> அனைத்துவகை போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக்!
அதனைத் தொடர்ந்து இந்திய அணி 2023ம் ஆண்டு உலகக்கிண்ணத்துக்கான அணியை தயார்படுத்திவந்த நிலையில், கேதர் ஜாதவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவர் இதுவரை இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 6 அரைச்சதங்கள் அடங்கலாக 1389 ஓட்டங்களையும், 9 T20I போட்டிகளில் விளையாடி 122 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இதேவேளை IPL தொடரை பொருத்தவரை 2018ம் ஆண்டு சென்னை சுபர் கிங்ஸ் அணி சம்பியனாவதற்கு முக்கியமான காரணமாக இவருடைய துடுப்பாட்டம் இருந்ததுடன், இறுதியாக 2023ம் ஆண்டு IPL இரண்டாவது பாதியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடியிருந்தார்.
இந்த இரண்டு அணிகளை தவிர்த்து சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்காக இவர் விளையாடியிருந்தார். கேதர் ஜாதவ் 95 IPL போட்டிகளில் விளையாடி 1208 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<