இலங்கை முக்கோணத் தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

31
Kashvee Gautam earns maiden ODI call-up for Sri Lanka tri-series

இலங்கையில் இந்த மாத இறுதிப்பகுதியில் நடைபெறவிருக்கும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வினை அறிவித்த ஆஸி. இளம் வீரர்<<

இலங்கையில் இம்மாதம் 27ஆம் திகதி தொடக்கம் மே 11ஆம் திகதி வரை இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பங்கெடுக்கும் முக்கோண மகளிர் ஒருநாள் தொடர் நடைபெறவிருக்கின்றது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணிக்குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஒருநாள் தொடருக்கு அயர்லாந்து தொடரின் பின்னர் ஹர்மன்பிரீத் கவ்ர் இந்திய மகளிர் அணியினை வழிநடாத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் இந்திய ஒருநாள் அணியில் இம்முறை வேகப்பந்துவீச்சாளர்களான ரேனுகா சிங் தாக்கூர், டைடஸ் சாது மற்றும் பூஜா வாஸ்ட்டக்கர் மற்றும் துடுப்பாட்டவீராங்கனை ஷெபாலி வெர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதேவேளை இம்முறை மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் சிறப்பாக பிரகாசித்த பந்துவீச்சாளர் காஷ்வி கௌதமிற்கும் இலங்கை முக்கோணத் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்திய மகளிர் ஒருநாள் அணி

ஹர்மன்பீரித் கவ்ர் (அணித் தலைவி), ஸ்மிரிதி மந்தனா (பிரதி அணித் தலைவி), பிரத்திக்கா ரவால், ஹர்லீன் டியோல், ஜெமிமா ரொட்ரிக்கஸ், ரிச்சா கோஸ், யாஸ்டிக்கா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவ்ர், காஸ்வி கௌதம், ஸ்னேஹ் ரானா, அருந்ததி ரெட்டி, தேஜால் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுச்சி உபத்யாய்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<