சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அத்துடன், கன்னிப் போட்டியில் ஆடிய இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 48ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
ப்ரவீனின் வரலாற்று சாதனையுடன் தொடரை வென்றது இலங்கை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட், பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்ததையடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் மற்றும் அரைச்சதம் விளாசி இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 712 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் திமுத் கருணாரத்ன டெஸ்ட் தரவரிசையில் 22ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அதேநேரம், இறுதியாக 2019 ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் தரவரிசையில் 6ஆவது இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதுஎவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் இரட்டைச் சதம், சதம் மற்றும் அரைச்சதம் உள்ளடங்கலாக 428 ஓட்டங்களைக் குவித்த திமுத் கருணாரத்ன தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Video – SLvBAN: Praveen, Dimuth நிகழ்த்திய அரிய சாதனைகள்..!| Sports RoundUp – Epi 160
இதனிடையே, டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 21ஆவது இடத்தில் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ், 24ஆவது இடத்துக்கும், 28ஆவது இடத்தில் இருந்த தனன்ஜய டி சில்வா 32ஆவது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.
அதேபோல, 35ஆவது இடத்தில் இருந்த நிரோஷன் டிக்வெல்ல 31ஆவது இடத்தையும், 73ஆவது இடத்தில் இருந்த லஹிரு திரிமான்ன 60ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
பங்களாதேஷ் அணி வீரர்களைப் பொறுத்தமட்டில், தமீம் இக்பால் 27ஆவது இடத்தையும், முஷ்பிகுர் ரஹீம் 21ஆவது இடத்தையும், மொமினுல் ஹக் 30ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, ICC இன் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையின் முதல் மூன்று இடங்களையும் கேன் வில்லியம்சன் (நியூசி.) ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.), மார்னஸ் லப்புஸேன் (ஆஸி.) ஆகியோர் தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேகப் பந்துவீச்சில் தடம்பதித்து சுழல் பந்தில் சாதித்த பிரவீன் ஜயவிக்ரம
இதேவேளை, பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் அறிமுகமாகி 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பிரவீன் ஜயவிக்ரம நேரடியாக 48ஆவது இடத்தைப் பிடித்தார்.
அதேபோல, இலங்கை அணியின் மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளரான ரமேஷ் மெண்டிஸ், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 88ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, ஐ.சி.சி இன் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ், இந்தியாவின் அஷ்வின், நியூசிலாந்தின் நீல் வேங்கர் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…