ஒருநாள் ஆசியக் கிண்ணத்திற்கான ஆப்கான் குழாம் அறிவிப்பு

278
Karim Janat makes ODI return after six years for Asia Cup

ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடருக்கான 17 பேர் அடங்கிய ஆப்கானிஸ்தான் குழாம் அந்த நாட்டு கிரிக்கெட் சபை (ACB) மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்றது

>> ஒருநாள் உலகக் கிண்ண சின்னங்களை அறிமுகம் செய்த ICC

ஹஸ்மத்துல்லா சஹிதி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசியக் கிண்ணத்திற்கான ஆப்கான் அணி பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியிருந்த பரீட் அஹ்மட், சஹிதுல்லாஹ் கமால் மற்றும் அஷ்மத்துல்லா ஒமர்சாய் ஆகியோருக்கு ஓய்வு வழங்கியிருக்கின்றது 

இதேவேளை பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அஷ்மத்துல்லா ஒமர்சாயின் பிரதியீட்டு வீரராக ஆடிய குல்படின் நயீப் ஆசியக் கிண்ணத்திற்கான ஆப்கான் அணியில் தொடர்ந்தும் தனது இடத்தினை தக்க வைத்திருக்கின்றார் 

ஆப்கான் அணிக்காக இறுதியாக ஆறு வருடங்களின் முன்னர் ஒருநாள் போட்டியொன்றில் ஆடியிருந்த கரீம் ஜனாட்டிற்கும் ஒருநாள் ஆசியக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரரான கரீம் ஜனாட் ஆப்கானிஸ்தான் T20 அணி மற்றும் உள்ளூர் லீக் கிரிக்கெட் தொடர்கள் என்பவற்றில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் தவிர பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் ஆடாது போன மத்திய வரிசை துடுப்பாட்டவீரர் நஜிபுல்லா சத்ரான், இடதுகை சுழல் சகலதுறைவீரர் ஷரபுத்தீன் அஷ்ரப் ஆகிய வீரர்களும் ஆசிய கிண்ண குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர் 

>> ஆசியக் கிண்ணத் தொடரினை தவறவிடும் துஷ்மன்த சமீர

ஆசியக் கிண்ணத் தொடரில் குழு Bஇல் காணப்படுகின்ற ஆப்கானிஸ்தான் அணி செப்டம்பர் 03ஆம் திகதி தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியினை லாஹூர் மைதானத்தில் நடைபெறுகின்றது 

ஆசியக் கிண்ண குழாம் 

ஹஷ்மத்துல்லா சஹிதி (அணித்தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹஸ்ஸன், ரஹ்மத் சாஹ், நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி, இக்ராம் அலிகில், ரஷீட் கான், குல்படின் நயீப், கரீம் ஜனாட், அப்துல் ரஹ்மான், ஷரபுத்தின் அஷ்ரப், முஜிபுர் ரஹ்மான், நூர் அஹ்மட், மொஹமட் சலீம், பசால்ஹக் பரூக்கி  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<