இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியானது நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கடந்த 2019ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
>>பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷிடம் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வி
இவ்வாறான நிலையில் உபாதையிலிருந்து குணமடைந்துவரும் வில்லியம்சன் முதல் போட்டியை மாத்திரம் தவறவிடுவார் என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடியிருந்தாலும், துடுப்பாட்ட வீரராக மாத்திரமே செயற்பட்டிருந்தார். களத்தடுப்பில் ஈடுபடவில்லை. என இவர் முழுமையான உடற்தகுதியை பெறவில்லை என பயிற்றுவிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் 9 போட்டிகள் விளையாடவுள்ள நிலையில், ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதற்கான அழுத்தத்தை அவருக்கு கொடுக்க கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என இவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 5ம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<