நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது 3வது T20i போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது T20i போட்டியில் விளையாடியிருந்த இவர், வைத்திய ஆலோசனை ஒன்றுக்கான சந்திப்புக்கு முன்பதிவு செய்துள்ள காரணத்தால் அவரால் மூன்றாவது T20i போட்டியில் விளையாட முடியாது என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிசாந்தன் அஜயின் அபார சதத்தால் யாழ். மத்திக்கு இலகு வெற்றி!
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் T20i போட்டி மழைக்காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.
இவ்வாறான கட்டாய வெற்றியை நோக்கிய போட்டியில் கேன் வில்லியம்சனின் வெளியேற்றம் அணிக்கு பின்னடைவை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வில்லியம்சன் கடைசி T20i போட்டியில் விளையாடாவிட்டாலும், ஒருநாள் தொடரில் அணியுடன் இணைந்துகொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சனுக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியூசிலாந்து அணியின் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வில்லியம்சன் விளையாடாத போட்டிகளில் டிம் சௌதி அணியின் தலைவராக செயற்பட்டுள்ளார்.
அதேநேரம், கேன் வில்லியம்சன் அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக செப்மன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மார்க் செப்மன் நியூசிலாந்து அணிக்காக 40 T20i போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 761 ஓட்டங்களை பெற்று 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20i போட்டி செவ்வாய்க்கிழமை (22) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<