வில்லியம்ஸனை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றிய 2019 உலகக் கிண்ணம்

148

இங்கிலாந்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியின் தோல்வி தனது வாழ்நாளில் மிகவும் உணர்ச்சிகரமான தருணம் என்பதை நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.

லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியிருந்தன. இந்தப் போட்டியானது சமனிலையாகியதுடன், சுப்பர் ஓவரும் சமனிலையாகி, பௌண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

ஒன்பது விரல்களுடன் இந்தியாவுக்கு விளையாடிய பார்த்திவ் பட்டேல்

இந்திய அணியின் விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக இருந்த பார்த்திவ் பட்டேல், தன் கைகளில் ஒன்பது விரல்கள் மட்டுமே…

இந்தப் போட்டியானது வாழ்வில் மறக்கமுடியாத உணர்ச்சிகரமான தருணம் என டேவிட் வோர்னருடன் இடம்பெற்ற இன்ஸ்ராகிராம் நேரடி கலந்துரைடியாடலின் போதே கேன் வில்லியம்சன் குறிப்பிட்டுள்ளார்.

“அதுவொரு உணர்ச்சிகரமான தருணமாகும். அத்துடன், அந்த நேரத்தில் கட்டாயம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாது. கிரிக்கெட் போட்டியொன்றின் போது எம்மால் கட்டுப்படுத்த முடியாத பல விடயங்கள் நடந்துக்கொண்டிருக்கும். ஆனால், நாம் அடுத்த கட்டத்தை கடப்பதற்கான சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். 

போட்டியை விடவும், இவ்வாறான போட்டி முடிந்த பின்னர் சரியான முறையில் நடந்துக்கொள்வது மிகவும் கடினமான விடயம். ஆனால், தொடரில் நாம் எவ்வாறு பிரகாசித்தோம் என்பது தொடர்பில் பெருமைக்கொள்ள வேண்டும். அதேநேரம், லோர்ட்ஸ் மைதானத்தில் 230-240 ஓட்டங்கள் என்பது கடினமான இலக்காக இருக்கும் என்பதை அறிந்திருந்தோம். 

நாம் ஒரு போட்டித்தன்மையான இலக்கை நிர்ணயித்திருந்தோம். அதேபோன்று, பந்துவீச்சிலும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை கொடுத்திருந்தோம் என்பது மனதுக்கு ஆறுதல் அளித்தது. ஆனால், போட்டியின் வெற்றியானது பல்வேறு விதங்களினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை நாம் முறையிட முடியாது. ஏனென்றால் அது போட்டியின் மற்றுமொரு பக்கமாகும்.

இதுபோன்ற வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்காது.  சர்வதேச போட்டிகள், முதற்தர போட்டிகள் மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் லீக் போட்டிகள் என பல்வேறு தொடர்கள் உள்ளன. எப்போதும் நாம் கடந்த காலங்கள் தொடர்பில் சிந்திக்காதது போன்று, அடுத்த போட்டிக்காக தயாராக வேண்டும்”

கேன் வில்லியம்ஸனின் தலைமைத்துவம் சர்வதேச கிரிக்கெட் இரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வாளர்களுக்கு இடையில் பாராட்டப்பட்டு வரும் விடயமாகும். இந்தநிலையில், உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியின் பின்னர், இவரது அமைதியும் நடந்துக்கொண்ட விதமும், அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. 

“அணியொன்றின் மிகச்சிறந்த வீரர் ஒருவர் சிறந்த தலைவராக செயற்படுவார் என்பதை கூறமுடியாது. அணித் தலைமையில் பல்வேறு விடயங்கள் தொடர்புப்பட்டிருக்கிறது. அணித் தலைமை பதவி என்பது கடினமானதாகும். எனவே, அதற்கு பொருந்தக்கூடியவர்களை சரியாக தெரிவுசெய்ய வேண்டும்”

ஆரம்பத்தில் நியூசிலாந்து அணியின் தலைமை பொறுப்பை வில்லியம்ஸன் ஏற்றுக்கொள்ளும் போது, அவரின் தலைமைப் பண்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதற்கான காரணம், அவர் அணியில் விளையாடிய போது, இருந்த அணித் தலைவர்கள் தான் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“உங்களது நாட்டின் அணித் தலைவராக நீங்கள் தெரிவுசெய்யப்படுவீர்கள் என நினைத்து தலைமத்துவத்துக்காக தயாராக முடியாது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் போது, அதனை எனக்கு விருப்பமானதாக மாற்றிக்கொண்டேன். அதேநேரம், அணியை சரியான பாதையில் அழைத்துச்செல்ல என்னால் முடிந்ததை கொடுத்து அணியை வழிநடத்த முயற்சித்தேன். அதிர்ஷடவசமாக சிறந்த அணித் தலைவர்களுக்கு கீழ் விளையாடியிருந்தேன். எனவே, அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் போது, ஏகமனதாக ஏற்றுக்கொண்டேன்” என்றார்.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<