குசல் பெரேராவின் வருகையால் கண்டி அணிக்கு முதல் வெற்றி

1163

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் SLC T20 லீக்கின் நேற்றைய (29) இரண்டாவது போட்டியில் கொழும்பு அணியை எதிர்கொண்ட கண்டி அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரின் முதல் வெற்றியினை சுவைத்துள்ளது.

கொழும்பு, தம்புள்ளை ஆகிய மைதானங்களில் போட்டிகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று கண்டி பல்லேகலை மைதானத்தில் போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

மெண்டிஸ், ராஜிதவின் சிறப்பாட்டத்தால் காலி அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை மாகாண அணிகளுக்கு..

நேற்றைய முதல் போட்டியில் தம்புள்ளை அணியை எதிர்கொண்ட காலி அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் கண்டி மற்றும் கொழும்பு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் கொழும்பு அணித் தலைவர் சந்திமால் விளையாடாத காரணத்தால், அவருக்கு பதிலாக ஜீவன் மெண்டிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அத்துடன், கடந்த போட்டிகளில் விளையாடாமலிருந்த கண்டி அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இந்தப் போட்டியில் களமிறங்கினர்.

கண்டி அணியின் தலைவராக மெதிவ்ஸ் செயற்பட்டார். இதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு அணியின் தலைவர் ஜீவன் மெண்டிஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதனடிப்படையில் களமிறங்கிய கொழும்பு அணி முதல் 10 ஓவர்களில் சிறப்பாக ஓட்டங்களை குவித்தது. மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்ததால் ஓட்டங்கள் வேகமாக பெறப்பட்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ அதிரடியாக ஆட, கொழும்பு அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

குணதிலக்கவின் அபார துடுப்பாட்டத்தால் தம்புள்ளைக்கு வெற்றி

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவின்…

எனினும் அடுத்த பத்து ஓவர்களில் கண்டி அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்த, கொழும்பு அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிகபட்சமாக அவிஷ்க பெர்னாண்டோ 35 பந்துகளுக்கு 54 ஓட்டங்களையும், பிரியமல் பெரேரா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். கண்டி அணியின் பந்து வீச்சில் மலிந்த புஷ்பகுமார 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த எதிர்பார்க்கப்பட்ட அஞ்செலோ மெதிவ்ஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கண்டி அணி சற்று நிலை தடுமாறியது.

எவ்வாறாயினும் அடுத்து ஜோடி சேர்ந்த குசல் பெரேரா மற்றும் தசுன் ஷானக ஜோடி வேகமாக ஓட்டங்களை குவித்தது. எதிரணியின் பந்து வீச்சை பதம் பார்த்த குசல் பெரேரா 45 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் தசுன் ஷானக 23 பந்துகளில் அரைச்சம் கடந்து, இந்த தொடரின் வேகமான அரைச்சதத்தை பதிவுசெய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய இவர் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 29 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, அணியின் முதலாவது வெற்றியை உறுதிசெய்தார்.

ஆப்கானை வீழ்த்தி ஒருநாள் தொடரை தக்கவைத்த அயர்லாந்து

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு..

இதன்படி கண்டி அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இந்த போட்டியில் கொழும்பு அணி தோல்வியடைந்திருந்தாலும், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. எனினும் கண்டி அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளதால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்









Title





Full Scorecard

Team Colombo

165/7

(20 overs)

Result

Team Kandy

168/3

(17.3 overs)

Kandy won by 7 wickets

Team Colombo’s Innings

Batting R B
Avishka Fernando c D Lakshan b M Pushpakumara 54 35
Mahela Udawatte b C Asalanka 22 26
Shehan Jayasuriya c D Shanaka b M Pushpakumara 12 10
Priyamal Perera c L Malinga b L Gamage 30 26
Chathuranga de Silva c K Janith b D Shanaka 11 10
Jeewan Mendis b L Malinga 15 9
Lahiru Madushanka not out 8 4
Akila Dananjaya (runout) D Shanaka 0 0
Extras
13 (lb 6, w 7)
Total
165/7 (20 overs)
Fall of Wickets:
1-76 (M Udawatte, 9.2 ov), 2-84 (A Fernando, 10.5 ov), 3-99 (S Jayasuriya, 12.5 ov), 4-120 (C de Silva, 15.5 ov), 5-146 (J Mendis, 18.3 ov), 6-164 (P Perera, 19.5 ov), 7-165 (A Dananjaya, 20.0 ov)
Bowling O M R W E
Lasith Malinga 4 0 37 1 9.25
Lahiru Gamage 3 0 34 1 11.33
Charith Asalanka 4 0 26 1 6.50
Dasun Shanaka 4 0 28 1 7.00
Malinda Pushpakumara 4 0 25 2 6.25
Nisala Tharaka 1 0 9 0 9.00

Team Kandy’s Innings

Batting R B
Kusal Janith c P Perera b C de Silva 84 45
Lahiru Thirimanne b S Jayasuriya 0 1
Angelo Mathews c A Dananjaya b S Jayasuriya 12 13
Dasun Shanaka not out 60 29
Bhanuka Rajapaksa not out 10 17
Extras
2 (lb 1, w 1)
Total
168/3 (17.3 overs)
Fall of Wickets:
1-16 (L Thirimanne, 1.1 ov), 2-30 (A Mathews, 4.0 ov), 3-148 (K Janith, 13.4 ov)
Bowling O M R W E
Nuwan Pradeep 3 0 23 0 7.67
Shehan Jayasuriya 4 0 27 2 6.75
Akila Dananjaya 3 0 33 0 11.00
Lahiru Madushanka 1.3 0 17 0 13.08
Jeewan Mendis 2 0 29 0 14.50
Asitha Fernando 2 0 15 0 7.50
C de Silva 2 0 23 1 11.50







ஆட்டநாயகன் குசல் ஜனித் பெரேரா

முடிவுகண்டி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<