கண்டி டஸ்கர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 08ஆவது போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி திசர பெரேரா-தனன்ஞய டி சில்வா ஆகியோரின் அசத்தல் இணைப்பாட்டத்தோடு 54 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
முதல் வெற்றியினைப் பதிவு செய்த கண்டி டஸ்கர்ஸ் அணி
இந்த வெற்றியின் மூலம் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் தம்முடைய மூன்றாவது தொடர் வெற்றியினையும் பதிவு செய்துகொள்கின்றது.
கண்டி டஸ்கர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகள் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (1) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.
இப்போட்டிக்கான கண்டி டஸ்கர்ஸ் அணி மாற்றங்கள் எதுவுமின்றி களமிறங்க, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் பினுர பெர்னாந்துவிற்குப் பதிலாக சுரங்க லக்மாலினை தமது குழாத்திற்குள் உள்வாங்கியிருந்தது.
கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (C&WK), ப்ரென்டன் டெய்லர், குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், சீகுகே பிரசன்ன, கமிந்து மெண்டிஸ், நவீன் ஹுல்-ஹக், நுவன் பிரதீப், முனாப் பட்டேல்
ஜப்னா ஸ்டாலியன்ஸ் – அவிஷ்க பெர்னாந்து, தனன்ஞய டி சில்வா, சொஹைப் மலிக், மினோத் பானுக்க, டொம் மூர்ஸ் (WK), திசர பெரேரா (C), வனிந்து ஹஸரங்க, சத்துரங்க டி சில்வா, உஸ்மான் சின்வாரி, டுவான்னே ஒலிவியர், சுரங்க லக்மால்
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதலில் துடுப்பாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி ஆரம்பத்தில் மிகப் பெரும் தடுமாற்றத்தினை சந்தித்தது. அவ்வணியின் ஆரம்ப வீரர்களாக வந்த அவிஷ்க பெர்னாந்து மற்றும் மினோத் பானுக்க ஆகியோர் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்த, எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர்களான டொம் மூர்ஸ், சொஹைப் மலிக் ஆகியோரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர். இதனால், ஒரு கட்டத்தில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.
Video – Dasun Shanaka வின் CAPTAINCY இன்னிங்ஸ்!
எனினும், இந்த தருணத்தில் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் திசர பெரேரா – தனன்ஞய டி சில்வா ஆகிய இருவரும் பொறுப்பான முறையில் துடுப்பாடி 118 ஓட்டங்களை ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டத்துடன் சரிவில் இருந்து மீண்ட ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இந்த தொடரில் தன்னுடைய இரண்டாவது தொடர் அரைச்சதத்தினை பதிவு செய்த திசர பெரேரா வெறும் 28 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், தனன்ஞய டி சில்வா தன்னுடைய 10ஆவது T20 அரைச்சதத்துடன் 38 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கண்டி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக நவின்-உல்-ஹக் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அசேல குணரத்ன 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 186 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டத் தொடங்கியது.
LPL தொடரில் கொழும்பு கிங்ஸ் அணிக்கு முதல் தோல்வி!
அந்தவகையில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக எதிர்பார்த்த வீரர்கள் அனைவரும் ஜொலிக்கத்தவற அவ்வணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை சந்தித்தது.
கண்டி டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக ப்ரென்டன் டெய்லர் 32 பந்துகளுக்கு 46 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக உஸ்மான் ஷின்வாரி வெறும் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால், அணித்தலைவர் திசர பெரேரா மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேராவிற்கு வழங்கப்பட்டது.
இனி கண்டி டஸ்கர்ஸ் அணி தமது அடுத்த போட்டியில் எதிர்வரும் வியாழக்கிழமை (03) தம்புள்ள வைகிங் அணியினை எதிர்கொள்ள, அதேநாளில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் தமது அடுத்த போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் வீரர்களை சந்திக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Avishka Fernando | run out (Seekkuge Prasanna) | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Minod Bhanuka | st Kusal Janith b Asela Gunarathne | 15 | 23 | 2 | 0 | 65.22 |
Dhananjaya de Silva | c Nuwan Pradeep b Naveen ul Haq | 61 | 38 | 5 | 3 | 160.53 |
Tom Moores | b Asela Gunarathne | 4 | 6 | 0 | 0 | 66.67 |
Shoaib Malik | run out (Kamindu Mendis) | 9 | 7 | 1 | 0 | 128.57 |
Thisara Perera | c Seekkuge Prasanna b Naveen ul Haq | 68 | 28 | 5 | 5 | 242.86 |
Wanindu Hasaranga | c Dilruwan Perera b Nuwan Pradeep | 5 | 4 | 1 | 0 | 125.00 |
Chathuranga de Sliva | c Seekkuge Prasanna b Naveen ul Haq | 5 | 5 | 1 | 0 | 100.00 |
Usman Shinwari | not out | 6 | 6 | 1 | 0 | 100.00 |
Suranga Lakmal | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 9 (b 0 , lb 1 , nb 2, w 6, pen 0) |
Total | 185/8 (20 Overs, RR: 9.25) |
Did not bat | Duanne Olivier, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Munaf Patel | 3 | 0 | 14 | 0 | 4.67 | |
Dilruwan Perera | 3 | 0 | 30 | 0 | 10.00 | |
Asela Gunarathne | 3 | 0 | 20 | 2 | 6.67 | |
Naveen ul Haq | 4 | 0 | 44 | 3 | 11.00 | |
Seekkuge Prasanna | 1 | 0 | 9 | 0 | 9.00 | |
Kamindu Mendis | 2 | 0 | 23 | 0 | 11.50 | |
Nuwan Pradeep | 4 | 0 | 44 | 1 | 11.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Janith | c Minod Bhanuka b Usman Shinwari | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Rahmanullah Gurbaz | c Duanne Olivier b Usman Shinwari | 6 | 5 | 0 | 1 | 120.00 |
Kusal Mendis | c Dhananjaya de Silva b Suranga Lakmal | 20 | 9 | 1 | 2 | 222.22 |
Brendon Taylor | c Thisara Perera b Duanne Olivier | 46 | 32 | 4 | 3 | 143.75 |
Kamindu Mendis | c Suranga Lakmal b Thisara Perera | 9 | 10 | 1 | 0 | 90.00 |
Asela Gunarathne | lbw b Thisara Perera | 31 | 24 | 4 | 0 | 129.17 |
Seekkuge Prasanna | c Thisara Perera b Wanindu Hasaranga | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Dilruwan Perera | c Minod Bhanuka b Usman Shinwari | 9 | 8 | 0 | 1 | 112.50 |
Naveen ul Haq | c Usman Shinwari b Wanindu Hasaranga | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Nuwan Pradeep | c Thisara Perera b Suranga Lakmal | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Munaf Patel | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 1 (b 1 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 131/10 (17.1 Overs, RR: 7.63) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Usman Shinwari | 3 | 0 | 17 | 3 | 5.67 | |
Suranga Lakmal | 3 | 0 | 27 | 2 | 9.00 | |
Chathuranga de Sliva | 2 | 0 | 30 | 0 | 15.00 | |
Duanne Olivier | 3 | 0 | 30 | 1 | 10.00 | |
Thisara Perera | 2.1 | 0 | 9 | 2 | 4.29 | |
Wanindu Hasaranga | 4 | 0 | 17 | 2 | 4.25 |
முடிவு – ஜப்னா ஸ்டாலியன்ஸ் 54 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<