லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 06ஆவது போட்டியில் கண்டி டஸ்கர்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக 25 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் LPL தொடரில் இதுவரை எந்தவொரு வெற்றிகளையும் பதிவு செய்யாத கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தத்தமது முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தன.
ரசலின் மிரட்டல் அதிரடியோடு வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ்
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் தலைவர் சஹீட் அப்ரிடி, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு வழங்கினார்.
இப்போட்டிக்கான கோல் கிளேடியேட்டர்ஸ் அணி மாற்றங்கள் ஏதுமின்றி களமிறங்க, கண்டி டஸ்கர்ஸ் அணி தமது குழாத்திற்குள் வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல் மற்றும் விக்டெ்காப்பு துடுப்பாட்டவீரர் ப்ரெண்டன் டெய்லர் ஆகியோரினை உள்வாங்கியிருந்தது.
கோல் கிளேடியேட்டர்ஸ் – தனுஷ்க குணத்திலக்க, ஹஸ்ரத்துலல்லா சஷாய், அசாம் கான் (WK), பானுக்க ராஜபக்ஷ, சஹிட் அப்ரிடி (C), அகில தனன்ஞய, மிலிந்த சிறிவர்தன, செஹான் ஜயசூரிய, மொஹமட் சிராஸ், மொஹமட் ஆமீர், அசித்த பெர்னாந்து
கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (C), ப்ரென்டன் டெய்லர் (WK), குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், சீகுகே பிரசன்ன, கமிந்து மெண்டிஸ், நவீன் ஹுல்-ஹக், நுவன் பிரதீப், முனாப் பட்டேல்
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் அதிரடியான துவக்கம் தந்த போதும் வெறும் 19 ஓட்டங்களையே பெற்றார். இதேநேரம், அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவும் பெரிதாக பிரகாசிக்காமல் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், குசல் மெண்டிஸ் மற்றும் ப்ரென்டன் டெய்லர் ஆகியோர் தமது பொறுப்பான துடுப்பாட்டம் மூலம் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு வலுச் சேர்த்தனர். இதனால், கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை எடுத்தது.
தம்புள்ள வைகிங் அணியில் இணையும் சதீர சமரவிக்ரம
கண்டி டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக T20 போட்டிகளில் தன்னுடைய 25ஆவது அரைச்சதத்தினை பூர்த்தி செய்த ப்ரென்டன் டெய்லர் 35 பந்துகளுக்கு 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றார். அதேநேரம், குசல் மெண்டிஸ் 30 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக லக்ஷான் சந்தகன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய, மொஹமட் ஆமிர் மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்வீதமும் சாய்த்திருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 196 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் காட்டியது. அவ்வணிக்காக ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்த அணித்தலைவர் சஹிட் அப்ரிடி, பானுக்க ராஜபகஷ மற்றும் ஹஸ்ரத்துல்லா சஷாய் ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி மைதானத்தினை விட்டு வெளியேறினர்.
ஆனால், ஆரம்ப வீரராக களம் வந்த தனுஷ்க குணத்திலக்க தனியொருவராக போராட்டத்தினை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். எனினும், அவரின் விக்கெட்டும் இறுதியில் பறிபோக கோல் கிளேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக போராட்டத்தினை காட்டியிருந்த தனுஷ்க குணத்திலக்க 53 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் கண்டி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக முனாப் படேல், டில்ருவான் பெரேரா, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன மற்றும் நவின்-உல்-ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டவீரர் ப்ரென்டன் டெய்லர் தெரிவாகினார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றி மூலம் கண்டி டஸ்கர்ஸ் அணி, LPL தொடரில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்து கொள்கின்றது.
கண்டி டஸ்கர்ஸ் அணி தமது அடுத்த போட்டியில் நாளை (30) ஜப்னா ஸ்டாலியன்ஸினை எதிர்கொள்ள கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் அடுத்த போட்டியும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் உடன் எதிர்வரும் வியாழன் (03) நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Janith | c Danushka Gunathilaka b Lakshan Sandakan | 27 | 24 | 4 | 0 | 112.50 |
Rahmanullah Gurbaz | c Hazratullah Zazai b Akila Dananjaya | 19 | 10 | 1 | 2 | 190.00 |
Kusal Mendis | c Shahid Afridi b Lakshan Sandakan | 49 | 30 | 1 | 4 | 163.33 |
Brendon Taylor | not out | 51 | 35 | 7 | 1 | 145.71 |
Kamindu Mendis | b Mohammad Amir | 28 | 16 | 3 | 1 | 175.00 |
Asela Gunarathne | c Bhanuka Rajapakse b Mohamed Shiraz | 11 | 6 | 2 | 0 | 183.33 |
Seekkuge Prasanna | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 10 (b 0 , lb 4 , nb 2, w 4, pen 0) |
Total | 196/5 (20 Overs, RR: 9.8) |
Did not bat | Naveen ul Haq, Dilruwan Perera, Nuwan Pradeep, Munaf Patel, |
Fall of Wickets | 1-22 (2.4) Rahmanullah Gurbaz, 2-97 (9.5) Kusal Janith, 3-106 (11.3) Kusal Mendis, 4-171 (16.6) Kamindu Mendis, 5-194 (19.3) Asela Gunarathne, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Akila Dananjaya | 4 | 0 | 43 | 1 | 10.75 | |
Mohammad Amir | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Mohamed Shiraz | 4 | 0 | 52 | 1 | 13.00 | |
Shahid Afridi | 4 | 0 | 25 | 0 | 6.25 | |
Lakshan Sandakan | 4 | 0 | 41 | 2 | 10.25 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Danushka Gunathilaka | run out (Asela Gunarathne) | 82 | 53 | 13 | 1 | 154.72 |
Hazratullah Zazai | c Kamindu Mendis b Munaf Patel | 2 | 2 | 0 | 0 | 100.00 |
Azam Khan | c Priyamal Perera b Asela Gunarathne | 13 | 9 | 1 | 1 | 144.44 |
Bhanuka Rajapakse | run out (Nuwan Pradeep) | 12 | 8 | 1 | 1 | 150.00 |
Milinda Siriwardane | st Brendon Taylor b Dilruwan Perera | 13 | 6 | 3 | 0 | 216.67 |
Shahid Afridi | c Kusal Mendis b Seekkuge Prasanna | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Shehan Jayasuriya | c Rahmanullah Gurbaz b Naveen ul Haq | 17 | 23 | 0 | 0 | 73.91 |
Mohamed Shiraz | not out | 9 | 6 | 1 | 0 | 150.00 |
Mohammad Amir | not out | 15 | 12 | 1 | 1 | 125.00 |
Extras | 8 (b 1 , lb 4 , nb 0, w 3, pen 0) |
Total | 171/7 (20 Overs, RR: 8.55) |
Did not bat | Akila Dananjaya, Lakshan Sandakan, |
Fall of Wickets | 1-3 (0.4) Hazratullah Zazai, 2-24 (3.2) Azam Khan, 3-45 (5.4) Bhanuka Rajapakse, 4-74 (7.6) Milinda Siriwardane, 5-85 (8.5) Shahid Afridi, 6-138 (15.5) Shehan Jayasuriya, 7-150 (17.3) Danushka Gunathilaka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Munaf Patel | 3 | 0 | 35 | 1 | 11.67 | |
Dilruwan Perera | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Asela Gunarathne | 4 | 1 | 28 | 1 | 7.00 | |
Nuwan Pradeep | 3 | 0 | 24 | 0 | 8.00 | |
Seekkuge Prasanna | 1 | 0 | 12 | 1 | 12.00 | |
Naveen ul Haq | 4 | 0 | 33 | 1 | 8.25 | |
Kamindu Mendis | 1 | 0 | 8 | 0 | 8.00 |
முடிவு – கண்டி டஸ்கர்ஸ் 25 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<