நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் 11ஆவது போட்டியில் தம்புள்ள வைகிங் அணி, கண்டி டஸ்கர்ஸ் வீரர்களுக்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவுசெய்த ஸ்டாலியன்ஸ்!
மேலும், இந்த வெற்றியுடன் தம்புள்ள வைகிங் அணி LPL தொடரில் தம்முடைய மூன்றாவது வெற்றியினையும் பதிவு செய்திருக்கின்றது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் வியாழக்கிழமை (3) ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
இப்போட்டிக்கான கண்டி டஸ்கர்ஸ் அணி மாற்றங்கள் ஏதுமின்றி களமிறங்க, தம்புள்ள வைகிங் அணி தமது வீரர்கள் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ், சகலதுறைவீரர் சமியுல்லாஹ் சின்வாரி ஆகியோரினை உள்வாங்கியிருந்தது.
கண்டி டஸ்கர்ஸ் – குசல் பெரேரா (C&WK), ப்ரென்டன் டெய்லர், குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, டில்ருவான் பெரேரா, ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், சீகுகே பிரசன்ன, கமிந்து மெண்டிஸ், நவீன் ஹுல்-ஹக், நுவன் பிரதீப், முனாப் பட்டேல்
தம்புள்ள வைகிங் – உபுல் தரங்க, தசுன் ஷானக (C), நிரோஷன் டிக்வெல்ல (WK), சமித் பட்டேல், அஞ்செலோ பெரேரா, ஷமியுல்லாஹ் சின்வாரி, ரமேஷ் மெண்டிஸ், மலிந்த புஷ்பகுமார, சசிந்து கொலம்பகே, அன்வர் அலி, கசுன் ராஜித
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு, ஆரம்பவீரராக களம்வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடி ஆரம்பம் தந்து 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சீரான வேகத்துடன் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு கண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
கண்டி டஸ்கர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் T20 போட்டிகளில் தன்னுடைய 11ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த குசல் மெண்டிஸ் 45 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களைப் பெற்றார். இதேநேரம், குசல் ஜனித் பெரேரா 34 பந்துகளுக்கு 41 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தம்புள்ள வைகிங் அணியின் பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடதக்கது.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 157 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ள வைகிங் அணி தொடக்கத்தில் ஒரு சிறு தடுமாற்றத்தினைக் காட்டியது. அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல வெறும் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தும், உபுல் தரங்க 19 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தும் ஏமாற்றமளித்தனர்.
எனினும், இதனையடுத்து இணைந்த அஞ்செலோ பெரேரா மற்றும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் நிதானமான முறையில் துடுப்பாடி அணியினை வெற்றிப் பாதையில் வழிநடாத்தினர்.
அதன்படி, இந்த இரண்டு வீரர்களினதும் துடுப்பாட்ட உதவியுடன் தம்புள்ள வைகிங் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 157 ஓட்டங்களுடன் அடைந்தது.
தம்புள்ள வைகிங் அணியின் வெற்றி இலக்கிற்கு உதவியாக இருந்த அஞ்செலோ பெரேரா T20 போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட 6ஆவது அரைச்சதத்துடன் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அதேநேரம், தசுன் ஷானக்க 23 பந்துகளில் 33 ஓட்டங்களை எடுத்து தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
நைஜீரியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் அசங்க குருசிங்ஹ
கண்டி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சில் முனாப் படேல், டில்ருவான் பெரேரா, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியிருந்தது.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை தம்புள்ள வைகிங் அணிக்காக சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்திய அஞ்செலோ பெரேரா பெற்றுக் கொண்டார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் தம்புள்ள வைகிங் அணி தமது அடுத்த போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் வீரர்களை எதிர்வரும் சனிக்கிழமை (5) எதிர்கொள்ள, அதேநாளில் கண்டி டஸ்கர்ஸ் அணி தமது அடுத்த போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி வீரர்களுடன் மோதுகின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | c Sachindu Colambage b Kasun Rajitha | 15 | 10 | 1 | 1 | 150.00 |
Kusal Janith | c Sachindu Colambage b Ramesh Mendis | 41 | 34 | 5 | 0 | 120.59 |
Kusal Mendis | c Dasun Shanaka b Samit Patel | 55 | 45 | 4 | 2 | 122.22 |
Brendon Taylor | c Anwar Ali b Malinda Pushpakumara | 13 | 11 | 2 | 0 | 118.18 |
Seekkuge Prasanna | c Ramesh Mendis b Malinda Pushpakumara | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Asela Gunarathne | not out | 18 | 12 | 1 | 1 | 150.00 |
Kamindu Mendis | c Ashen Bandara b Kasun Rajitha | 8 | 7 | 0 | 1 | 114.29 |
Dilruwan Perera | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 1 , lb 1 , nb 0, w 4, pen 0) |
Total | 156/6 (20 Overs, RR: 7.8) |
Did not bat | Naveen ul Haq, Nuwan Pradeep, Munaf Patel, |
Fall of Wickets | 1-33 (3.5) Rahmanullah Gurbaz, 2-91 (11.2) Kusal Janith, 3-125 (16.1) Brendon Taylor, 4-125 (16.2) Seekkuge Prasanna, 5-129 (17.1) Kusal Mendis, 6-155 (19.4) Kamindu Mendis, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Anwar Ali | 3 | 0 | 37 | 0 | 12.33 | |
Kasun Rajitha | 3 | 0 | 16 | 2 | 5.33 | |
Dasun Shanaka | 2 | 0 | 16 | 0 | 8.00 | |
Ramesh Mendis | 4 | 0 | 21 | 1 | 5.25 | |
Sachindu Colambage | 1 | 0 | 18 | 0 | 18.00 | |
Malinda Pushpakumara | 4 | 0 | 28 | 2 | 7.00 | |
Samit Patel | 3 | 0 | 18 | 1 | 6.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Niroshan Dickwella | c Kusal Janith b Munaf Patel | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Upul Tharanga | c Seekkuge Prasanna b Asela Gunarathne | 19 | 15 | 2 | 1 | 126.67 |
Angelo Perera | c Rahmanullah Gurbaz b Dilruwan Perera | 67 | 49 | 5 | 3 | 136.73 |
Samit Patel | c Kamindu Mendis b Seekkuge Prasanna | 11 | 10 | 1 | 0 | 110.00 |
Dasun Shanaka | c Asela Gunarathne b Nuwan Pradeep | 33 | 23 | 3 | 1 | 143.48 |
Samiullah Shinwari | not out | 11 | 10 | 2 | 0 | 110.00 |
Anwar Ali | not out | 9 | 6 | 0 | 1 | 150.00 |
Extras | 3 (b 0 , lb 2 , nb 0, w 1, pen 0) |
Total | 157/5 (19.2 Overs, RR: 8.12) |
Did not bat | Ramesh Mendis, Malinda Pushpakumara, Sachindu Colambage, Kasun Rajitha, |
Fall of Wickets | 1-4 (0.3) Niroshan Dickwella, 2-42 (5.5) Upul Tharanga, 3-56 (8.1) Samit Patel, 4-135 (16.1) Angelo Perera, 5-142 (17.1) Dasun Shanaka, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Munaf Patel | 3 | 0 | 20 | 1 | 6.67 | |
Dilruwan Perera | 3 | 0 | 23 | 1 | 7.67 | |
Asela Gunarathne | 4 | 0 | 26 | 1 | 6.50 | |
Seekkuge Prasanna | 4 | 0 | 36 | 1 | 9.00 | |
Nuwan Pradeep | 2.2 | 0 | 16 | 1 | 7.27 | |
Naveen ul Haq | 2 | 0 | 24 | 0 | 12.00 | |
Kamindu Mendis | 1 | 0 | 9 | 0 | 9.00 |
முடிவு – தம்புள்ள வைகிங் 5 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<