லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவிருக்கும் ஐந்து அணிகளில் ஒன்றான கண்டி டஸ்கர்ஸ், தமது முகாமைத்துவ குழுவுக்குள் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான பர்வீஸ் மஹரூப், நுவான் குலசேகர மற்றும் லங்கா டி சில்வா ஆகியோரினை இணைத்திருப்பதாக ThePapare.com இற்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
LPL தொடரில் விளையாடவுள்ள இர்பான் பத்தான்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பத்தான், லங்கா ப்ரீமியர் லீக்கின் கண்டி…
கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த வீரர்களில் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான நுவான் குலசேகர கண்டி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்படவுள்ளதோடு, விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான லங்கா டி சில்வா களத்தடுப்பு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம், கடைசியாக நடைபெற்ற இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணக் தொடரில் இலங்கை அணியின் முகாமையாளராக செயற்பட்ட முன்னாள் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹரூப், கண்டி டஸ்கர்ஸ் அணியின் முகாமையாளராகவும் கிரிக்கெட் இயக்குனராகவும் செயற்படவிருக்கின்றார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
துடுப்பு மட்டையை வீசி எறிந்த கிறிஸ் கெய்லுக்கு நேர்ந்த கதி
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஒரு ஓட்டத்தினால்…
இந்த வீரர்களின் வருகை, இந்திய பொலிவூட் நட்சத்திரம் சல்மான் கானின் சகோதரர் சொஹைல் கான் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு மிகப் பெரிய பலமாக கருதப்படுகின்றது.
மறுமுனையில் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடும் கண்டி டஸ்கர்ஸ் அணியில் கிறிஸ் கெயில், குசல் பெரேரா, இர்பான் பதான் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க