7ஆவது தடவையாகவும் SSC கழகத்தின் ஆடை பங்காளியான கந்துரட்ட குடைகள்

187

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நட்சத்திர வீரர்களைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற முன்னணி கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான SSC கழகம், இலங்கையின் தரம்வாய்ந்த குடைகளையும், காலுறைகள், நுளம்பு வலைகளை உற்பத்தி செய்யும் கந்துரட்ட குழுமத்துடன் தொடர்ந்து 7 ஆவது தடவையாகவும் தனது உறவை மீண்டும் புதுப்பித்துள்ளது.

இதற்கமைய, அடுத்த வருடம் பூராகவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்களில் இடம்பெறும் போட்டிகளில் SSC கழகத்தின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளியாக தொடர்ந்து செயற்படுவதற்கு அண்மையில் ஒப்பந்தம் செய்து கொண்டது.

119 வருட வரலாற்றைக் கொண்ட SSC கிரிக்கெட் கழகம், உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடர்களில் அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அண்மையில் நிறைவுக்கு வளர்ந்துவரும் வீரர்களுக்கான கழகங்களுக்கு இடையிலான 2 நாட்கள் கொண்ட போட்டித் தொடரில் சம்பியன் பட்டத்தையும் வென்றது.

Photos: Kandurata Group Renews Partnership with SSC Cricket

ThePapare.com | 07/12/2018 Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended copyright infringement…

இந்த கழகத்துக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் 30 பேர் இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடியுள்ளதுடன், பெரும்பாலான வீரர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளனர்.

அதுமாத்திரமின்றி, 1996 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்கவும் SSC கழகத்தின் முன்னாள் வீரர் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

SSC கழகத்துக்கான அனுசரணையை கந்துரட்ட அம்ப்ரெல்லா இன்டஸ்ட்ரீஸ் பிறைவேட் லிமிடெட் அதிபர் எம்.ரி.எம் நௌஷாத் SSC கழகத்தின் பிரதிநிதிகளிடம் அண்மையில் கையளித்தார். இந்த நிகழ்வு கடந்த வாரம் SSC கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது கந்துரட்ட அம்ப்ரெல்லா இன்டஸ்ட்ரீஸ் பிறைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நௌபல், SSC கழகத்தின் பயிற்சியாளர் திலின கண்டம்பி, SSC கழகத்தின் தலைவர் தம்மிக்க பிரசாத், SSC கிரிக்கெட் குழுத் தலைவர் சமந்த தொடன்வெல, கிரிக்கெட் குழு மற்றும் மைதான செயலாளர் மைக்கல் டி சொய்ஸா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இலங்கையின் பல விளையாட்டுகளுக்கு தமது அனுசரணையினை வழங்கி வருகின்ற கந்துரட்ட அம்ப்ரெல்லா இன்டஸ்ட்ரீஸ் பிறைவேட் லிமிடெட் நிறுவனம், அண்மையில் நிறைவுக்கு வந்த 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் காலுறைகளின் அனுசரணையாளராகவும், கண்டி திரித்துவக் கல்லூரி றக்பி அணியின் பிரதான அனுசரணையாளராகவும் செயற்பட்டு வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<