பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான கம்ரன் அக்மல் T20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் காப்பாளராக 100 ஸ்டம்பிங்குகளை நிகழ்த்திய முதல் வீரராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் பேரவையானது சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நடாத்த முடியாத நிலையில் குறித்த தொடர்களை பிற்போட்டுள்ள நிலையில், தற்போது T20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் ‘நெஷனல் T20 கிண்ணம் 2020′ என்ற பெயரில் T20 லீக் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது.
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை?
குறித்த நெஷனர் T20 கிண்ண தொடரில் பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். மொத்தமாக 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் கடந்த மாதம் 30ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள குறித்த லீக் தொடரின் 24ஆவது லீக் போட்டி நேற்று (13) ராவல்பிண்டியில் சவுத்தண் பஞ்சாப் (பாகிஸ்தான்) – சென்ட்ரல் பஞ்சாப் (பாகிஸ்தான்) அணிகளுக்கிடையில் நடைபெற்றது. குறித்த T20 தொடரில் 38 வயதுடைய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான கம்ரன் சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று நடைபெற்ற குறித்த லீக் போட்டியின் போது சவுத்தண் பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய வேளையில் ஷான் மஸூத் 50 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஸபார் கொஹாரின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். குறித்த ஸ்டம்பிங்கை விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் நிகழ்த்தினார். இதன் மூலம் 2005ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் 264 T20 போட்டிகளில் விளையாடியுள்ள கம்ரன் அக்மல் T20 கிரிக்கெட் வரலாற்றில் 100 ஸ்டம்பிங்குகளை நிகழ்த்திய முதல் வீரராக சாதனை படைத்தார்.
இந்த வரிசையில் அடுத்த இடங்களில் முறையே இந்திய அணி வீரர் எம்.எஸ் டோனியும், இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவும் உள்ளனர்.
டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு தொடரும் சோகம்!
T20 போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்குகளை நிகழ்த்திய வீரர்கள்.
- கம்ரன் அக்மல் (2005-2020) – 264 போட்டிகளில் 100 ஸ்டம்பிங்ஸ்
- எம்.எஸ் டோனி (2006-2020) – 325 போட்டிகளில் 84 ஸ்டம்பிங்ஸ்
- குமார் சங்கக்கார (2004-2020) – 267 போட்டிகளில் 60 ஸ்டம்பிங்ஸ்
- தினேஷ் கார்த்திக் (2006-2020) – 295 போட்டிகளில் 59 ஸ்டம்பிங்ஸ்
- மொஹமட் ஷெஹ்ஷாட் (2010-2020) – 130 போட்டிகளில் 52 ஸ்டம்பிங்ஸ்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<