பாகிஸ்தான் A அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை A அணியின் தலைவராக இடதுகை துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த கமிந்து மெண்டிஸ், பாகிஸ்தான் A அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தலைவராக செயற்படவுள்ளதுடன், இந்த மூன்று போட்டிகளும் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் நடைபெறுகின்றன.
>>T10 லீக் ஆடும் இலங்கை வீரர்களுக்கு அனுமதி மறுப்பு
கமிந்து மெண்டிஸுடன், T20 உலகக்கிண்ணத்துக்கான குழாத்தில் இடம்பெற்றிருந்த புலின தரங்க, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் அஷேன் பண்டார ஆகியோரும் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டிகளில் விளையாடிய, ஓசத பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய, அசித பெர்னாண்டோ, கமில் மிஷார, சுமிந்த லக்ஷான் மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர், அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள், 10ம், 12ம் மற்றும் 15ம் திகதிகளில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<