டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இரண்டிலும், உலகில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,
ஐ.பி.எல் போட்டிகளில் 2010ஆம் ஆண்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றபோது, 169 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்கு, 4 ஓவர்களில் வெறுமனே 17 ஓட்டங்களைக் கொடுத்து, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி, சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்கை ஆற்றியிருந்தார்.
இப்போது 2016ஆம் ஆண்டில், சண் றைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு வழிகாட்டியாக முரளி செயற்பட்டுவருகிறார். இந்தத் தொடரின் சிறந்த பந்துவீச்சு அணியாக ஹைதராபாத் அணியே, கிரிக்கெட் விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்டது.
எனினும், கிறிஸ் கெயிலின் அதிரடியால் பெங்களூர் அணி முன்னிலை பெற்றபோது, அணியின் பந்துவீச்சாளர்களைப் பதற்றமின்றி இருக்குமாறு தெரிவித்ததாகத் தெரிவித்த முரளி, இரண்டு துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், பெறவேண்டிய ஓட்ட வீதத்தின் அளவு அதிகரிக்குமெனவும் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
ஒரு வீரராக, ஏராளமான கிண்ணங்களை வென்றுள்ள போதிலும், பயிற்றுநராக இதுவே முதற்கிண்ணம் எனத் தெரிவித்த முரளி, அதன் காரணமாக, மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்