ThePapare.com இன் 2021ஆம் ஆண்டின் பிரபல கால்பந்து வீரராக (ThePapare Most Popular Football Player of the Year 2021) இலங்கை கால்பந்தில் பிரகாசித்து வரும் இளம் வீரர் ஜூட் சுபன் தெரிவாகியுள்ளார்.
இலங்கையின் சுபர் லீக், சுபர் லீக் முன் பருவப் போட்டிகளில் ஆடிய 17 கழகங்களைச் சேர்ந்த வீரர்கள், இலங்கை தேசிய அணி மற்றும் 23 வயதின்கீழ் தேசிய அணி என்பவற்றை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் என மொத்தம் 81 வீரர்கள் இந்த பிரபல வீரரை தெரிவு செய்வதற்கான போட்டிக்கு செய்யப்பட்டிருந்தனர்.
- 2021ஆம் ஆண்டின் ThePapare பிரபல கால்பந்து வீரர்
- 1995 SAFF கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு கௌரவிப்
- மேல் மாகாணத்தை வீழ்த்திய சபரகமுவ; தென் மாகாணத்திற்கு முதல் வெற்றி
அதில், முதல் கட்டமான இணையத்தள வாக்கெடுப்பு ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இடம்பெற்றது. அதில் முதல் 20 இடங்களைப் பெற்ற வீரர்கள், அடுத்த கட்டமான SMS முறையிலான வாக்கெடுப்பிற்கு தெரிவாகினர். SMS வாக்கெடுப்பானது ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி வரையில் 10 நாட்களுக்கு இடம்பெற்றது.
குறித்த 10 நாட்களும் நிகழ்ந்த கடுமையான போட்டியின் பின்னர், ஜூட் சுபன் மொத்தமாக 170,627 SMS வாக்குகளைப் பெற்று வெற்றியாளராகத் தெரிவானார். மற்றொரு வட மாகாண வீரரான டக்சன் பியூஸ்லஸ் 127,793 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், இலங்கை தேசிய அணியின் சிரேஷ்ட வீரரான கவிந்து இஷான் 122,589 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
இதில், முதல் சில நாட்களாக கவிந்து இஷான் முன்னிலை வகித்ததுடன், பின்னர் சுபன் மற்றும் பியூஸ்லஸ் ஆகியோரிடையே கடுமையான போட்டி தொடர்ந்தது. இருவரும் முதல் இரண்டு இடங்களையும் மாறி மாறி பெற்றனர். எனினும், இறுதி நாளில் சுபன் பெற்ற அதிக எண்ணிக்கையிலான வாக்குகளால் அவர் வெற்றியாளராகத் தெரிவானார்.
>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<