CPL தொடரில் 15 பந்துகளில் அரைச் சதம் கடந்து அசத்திய டுமினி

136

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் (CPL) விளையாடி வரும், தென்னாபிரிக்க அணியின் ஜேபி டுமினி, CPL தொடரில் வேகமாக அரைச் சதம் கடந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

டி20 சர்வதேச அரங்கில் உலக சாதனை படைத்த டேவிட் மில்லர்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க…

தென்னாபிரிக்க அணியின் ஜேபி டுமினி, கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். இதில், நேற்று பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இவர், வெறும் 15 பந்துகளில் அரைச் சதம் கடந்து, CPL தொடரில் அதிவேக அரைச் சதத்தை கடந்தவர் என்ற பெருமையை பெற்றார்.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணி, 192 ஓட்டங்களை குவித்திருந்தது. ஒரு கட்டத்தில் இந்த அணி ஓட்டங்களை பெற்றுக்கொள்ள தடுமாறிய போதும், 15வது ஓவரில் களமிறங்கிய டுமினி அதிரடியாக ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எணிக்கைக்கு வலுச்சேர்த்திருந்தார். 

முதல் 5 பந்துகளில் அவர் வெறும் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். எனினும், ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் 18வது ஓவரை அலி கான் வீசிய நிலையில், குறித்த ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரியை விளாசினார். தொடர்ந்து ஜிம்மி நீஷம் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகளை விளாசியதுடன், 15 பந்துகளில் அரைச் சதம் கடந்து சாதித்தார்.  

டுமினி, இந்தப் போட்டியில், 20 பந்துகளில் 65 ஓட்டங்களை குவித்திருந்தார். இதில், 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளையும் இவர் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முதலில் 17 பந்துகளில் அரைச் சதம் கடந்த எவின் லிவிஸ் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் வேகமாக அரைச் சதம் கடந்தவர் என்ற சாதனையை கைவசம் வைத்திருந்தார். அதுவும், இந்த பருவகாலத்தில் நடைபெற்ற ஜமைக்கா டலவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிக்காக விளையாடி இவர் 18 பந்துகளில் 53 ஓட்டங்களை விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

கரீபியன் ப்ரீமியர் லீக்கில் வேகமாக அரைச் சதம் கடந்த வீரர்கள்

  • ஜேபி டுமினி – 15 பந்துகள் எதிர் ட்ரைன்பகோ நைட் ரைடர்ஷ் 2019
  • எவின் லிவிஸ் – 17 பந்துகள் சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் 2019
  • சொஹைல் தன்வீர் – 18 பந்துகள் எதிர் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் 2014

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<