ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜொனதன் ட்ரொட்டின் பதவிக்காலத்தினை 2024ஆம் ஆண்டின் இறுதி வரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>இலங்கை பயிற்றுவிப்பு குழாத்தில் இணையும் கண்டம்பி, சந்தன
ஜொனதன் ட்ரொட் ஆளுகையிலான ஆப்கானிஸ்தான் அணி அண்மைக்காலமாக சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. இவற்றுக்கு உதாரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு எதிராக கிடைத்த வெற்றிகளை குறிப்பிட முடியும்.
அதேவேளை ட்ரொட்டின் பயிற்றுவிப்பில் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷிற்கு எதிரான முதல் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றியதோடு, பாகிஸ்தானுக்கு எதிராகவும் T20I தொடர் ஒன்றை கைப்பற்றி சாதனையைப் பதிவு செய்திருந்தது. இவ்வாறாக விடயங்கள் காணப்படுகின்றமையே ட்ரொட்டின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
இதேவேளை இந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்க ஆகிய நாடுகளில் T20 உலகக் கிண்ணத் தொடரும் நடைபெறவுள்ள நிலையில் இந்த விடயங்களை கருத்திற் கொண்டுமே ட்ரொட்டின் பதவிக்காலமானது நீடிக்கப்பட்டிருக்கின்றது.
>> தசுன் ஷானகவின் தலைமைத்துவ சாதனைகள்
தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் T20I தொடர் ஒன்றில் ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணியானது அடுத்ததாக இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<