கிரிக்கெட் பாஷ் T20 அரையிறுதியில் யாழ் அணிகள்

955

பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் மற்றும் யாழ். மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்நது வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 20 பாடசாலைகளை உள்ளடக்கி நடாத்தும் “கிரிக்கெட் பாஷ்” போட்டித் தொடரின் அரையிறுதிக்கு யாழ் மாவட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இத்தொடரானது  இம்மாதம் 1ஆம் திகதி  முதல்  5ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானம், யாழ் மத்திய கல்லூரி மைதானம், புனித பத்திரிசியார் கல்லூரி மைதானம், யாழ்ப்பாணக் கல்லூரி மைதானம் என நான்கு மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன.  

இப்போட்டித் தொடரில், அணிகள் 04 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதற்சுற்றில் தமக்கிடையே மோதியிருந்தன. முதலாவது சுற்றின் நிறைவில் குழுவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதிப் போட்டியில்  பங்கெடுத்திருந்தன.

நேற்றைய தினம் இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி,  புனித பத்திரிசியார் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆகிய நான்கு யாழ் மாவட்ட அணிகளும் அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளன.

காலிறுதிப் போட்டி – 01

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் குழு Aஇன் சம்பியன்களான கொக்குவில் இந்துக் கல்லூரியும், குழு Dஇல் இரண்டாம் இடம் பிடித்த சென் ஜோன்ஸ் கல்லூரியும் மோதியிருந்தன.

ThePapare.comஇன் ஆட்டநாயகன் – சௌமியன்

கொக்குவில் இந்துக் கல்லூரி 129/7(20) – பானுஜன் 47 , துசியந்தன் 26, தனுக்சன் 22, கபில்ராஜ் 08/04, சௌமியன் 13/02

சென். ஜோன்ஸ் கல்லூரி 128/1 – யதுசன் 47* , சுபீட்சன் 41, சௌமியன் 30, நிருசிகன் 35/01

போட்டி முடிவு 09 விக்கெட்டுக்களால் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி


காலிறுதிப் போட்டி – 02

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் குழு Dஇன் சம்பியனான தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணியும், குழு Aஇல் இரண்டாவது இடம்பிடித்த மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி அணியினரும் மோதியிருந்தனர்.

ThePapare.comஇன் ஆட்டநாயகன் – ஜனுசன்

மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி 123/6 (17) – நிலுசாந்த் 64, பிருந்தாபன் 13, ஜனுசன் 09/2 , சாருஜன் 16/01

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி 129/5 (16.3) – ஜனுசன் 51,  சஜீவன் 30*, கிரிசன் 23/02 , பிருந்தாவன் 13/01

போட்டி முடிவு 03 பந்துகள் மீதமாகவிருக்கையில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி


காலிறுதிப் போட்டி – 03

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் குழு Bஇன் சம்பியன்களான மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரி அணியும் குழு Cஇல் இரண்டாவது இடம்பிடித்த புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் போட்டியிட்டன.

ThePapare.com இன் ஆட்டநாயகன் – மோனிக் நிதுசன்

புனித பத்திரிசியார் கல்லூரி 148/10 (20) – மோனிக் நிதுசன் 29,  பேட்சன் 25, றொசாந்தன் 25, விதுசன் 15/03,  தநித்தீஷ் 18/01

மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரி  77/06 (20) – சதுஜன் 15* , விதுசன் 15, பியேட்றிக் 15/02,  அனோஜன் 19/02,  மோனிக் நிதுசன் 13/01

போட்டி முடிவு 71 ஓட்டங்களால் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி


காலிறுதிப் போட்டி – 04

கிளிநொச்சி மகா வித்தியாலயம் 63/10 (18.3) – யசிகுமார் 26 , தனுசன் 18, தசோபன் 06/03 , மதுசன் 09/02,  அனஸ்ராஜ்  09/02

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 66/01 (6.5) – கௌதமன் 49* , ஜெயதர்சன் 11, நிதுர்சன் 23/01

போட்டி முடிவு 79 பந்துகள் மீதமாகவிருந்த நிலையில் 09 விக்கெட்டுக்களால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி

ThePapare.comஇன் ஆட்டநாயகன் – தசோபன்

அரையிறுதிப் போட்டிகள் இன்றைய தினம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும், புனித பத்திரிசியார் கல்லூரி மைதானங்களில் இடம்பெறவிருக்கின்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் யாழ் மத்திய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகளும் போட்டியிடுகின்றன.

இப் போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளன.