நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ஜொப்ரா ஆர்ச்சர்

225

நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார்.  

காயம் காரணமாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாதியிலேயே விலகி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலும் பங்கேற்காமல்  ஜொப்ரா ஆர்ச்சர் நாடு திரும்பினார்.  

இலங்கையுடனான ஒருநாள் தொடரை தவறவிடும் இங்கிலாந்து பயிற்சியாளர்

அங்கு அவருக்கு முழங்கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காயம் குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டுத் தேறிய ஆர்ச்சர், சமீபத்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணிக்காகக் களமிறங்கினார்

கென்ட் அணிக்கு எதிராக 5 ஓவர்கள் மட்டுமே வீசிய ஆர்ச்சர் ஒரு விக்கெட்டை வீழ்த்திய நிலையில், அவருக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டது. இதனால் பந்துவீச முடியாமல் ஆர்ச்சர் சிரமப்பட்டதுடன், போட்டியிலிருந்து விலகினார்

இதையடுத்து ஆர்ச்சரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் காயம் முழுமையாகக் குணமாகவில்லை என்று தெரிவித்ததையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகியுள்ளார்

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில், ஜொப்ரா ஆர்ச்சரின் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் முழுமையாகச் சரியாகவில்லை. அவர் தொடர்ந்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியிருப்பதால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது

அடுத்தடுத்த தொடர்களை உறுதிசெய்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்

முன்னதாக, இந்தியத் தொடருக்கு வரும் முன் வீட்டில் வேலை செய்தபோது, கையில் கண்ணாடித் துண்டு கிழித்து ஆர்ச்சருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்துடனே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், T20 தொடர்களில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடியிருந்தார்.  

ஆனால், காயத்துக்கு சத்திரசிகிச்சை செய்வதற்காக ஒருநாள் தொடரிலிருந்தும், IPL தொடரிலிருந்தும் ஆர்ச்சர் விலகி நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…