T20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தமது முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சரை களமிறக்க எதிர்பார்ப்பதாக நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் கமிந்து மெண்டிஸ்
அந்தவகையில் கடந்த ஒரு வருடகாலமாக உபாதையினால் இங்கிலாந்துக்கு ஆடும் வாய்ப்பினை தவறவிட்ட ஜொப்ரா ஆர்ச்சர் T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான T20I தொடரில் பூரண உடற்தகுதியுடன் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக ஆடுவார் என நம்பப்படுகின்றது.
29 வயது நிரம்பிய ஜொப்ரா ஆர்ச்சர் கடந்த மூன்று ஆண்டுகளாக உபாதைகளால் அவதிப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ஜொப்ரா ஆர்ச்சர் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து அணிக்காக 7 போட்டிகளில் மாத்திரமே ஆடியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஜொப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டுக்கான இங்கிலாந்து உலகக் கிண்ண அணியில் இணைந்த போதிலும் அவர் அணியில் மேலதிக வீரராகவே காணப்பட்டிருந்தார்.
விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலேயே ஜொப்ரா ஆர்ச்சர் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் போது பிரகாசிப்பார் என எதிர்பார்ப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரொப் கீய் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட T20I தொடர் மே மாதம் 22ஆம் திகதி லீட்ஸ் நகரில் ஆரம்பமாகுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<