இங்கிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் ஜொப்ரா ஆர்ச்சருக்கு வாய்ப்பு

158

இங்கிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணம் மற்றும் அண்மையில் நிறைவுக்கு வந்த ஆஷஸ் கிண்ணம் ஆகியவற்றில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அனைத்து போட்டிகளுக்குமான ஒப்பந்தத்தில் முதல்தடவையாக இடம் பிடித்துள்ளார். 

கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், குறுகிய காலத்திலேயே தனது அபார திறமையினால் அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார்

ஐ.பி.எல் உரிமையாளர்களால் இலங்கை வீரர்ளுக்கு அழுத்தம் – அப்ரிடி குற்றச்சாட்டு

ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள் கொடுத்திருந்த….

இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் 2019 – 2020 வருடத்துக்கான மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பிடித்துள்ளார். அதிலும் குறிப்பாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட ஆறு இங்கிலாந்து வீரர்களில் ஜொப்ரா ஆர்ச்சரும் ஒருவர்.

மேற்கிந்திய தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆர்ச்சரின் தாயார் பார்படோஸையும், தந்தை இங்கிலாந்து நாட்டையும் சேர்ந்தவர்களாவர். 2013ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய ஆர்ச்சருக்கு அதன்பிறகு ஏற்பட்ட உபாதை காரணமாக தொடர்ந்து அந்த அணியில் நீடிக்க முடியாமல் போனது

எனினும், மேற்கிந்திய தீவுகளை பிறப்பிடமாகக் கொண்ட மற்றுமொரு இங்கிலாந்து அணி வீரரான கிறிஸ்  ஜோர்டனின் ஊக்கம் மற்றும் முயற்சியினால் ஆர்ச்சருக்கு இங்கிலாந்தின் கவுன்ட்டி அணியாக சசெக்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது. இதன்படி, 2016ஆம் ஆண்டு சசெக்ஸ் அணிக்காக அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் விளையாடினார்

இவர் வேகப் பந்துவீச்சில் மாத்திரமல்லாது, பின்வரிசை வீரராகக் களமிறங்கி துடுப்பாட்டத்திலும் அதிரடியாக விளையாடுகின்ற வீரராக மாறினார். இதனால் அவருக்கு அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், பாகிஸ்தான் சுப்பர் லீக் என முக்கியமான டி-20 போட்டிகளில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது

சட்டவேலி ஓட்டத்தில் மன்னாருக்கு பெருமை தேடிக் கொடுக்கும் அபிக்ஷன்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற….

இந்த நிலையில், கடந்த வருடம் முதல்தடவையாக .பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக ஆர்ச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

எனவே, கவுன்ட்டி போட்டிகளிலும், பல்வேறு லீக் போட்டிகளிலும் மாத்திரம் விளையாடி வந்த ஆர்ச்சருக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பும் கிட்டியது

இதன்படி, இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த ஆர்ச்சர், அண்மையில் நிறைவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக செயற்பட்டு இங்கிலாந்து அணியை தோல்வியின் பிடியிலிருந்து மீட்டார்

இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக இடம்பிடித்த அவர், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி தலா இரண்டு 6 விக்கெட் பிரதிகளுடன் ஒட்டுமொத்தமாக 22 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்

ஆகவே, மிகவும் குறுகிய காலத்தில் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த நட்சத்திர வீரருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனைத்து வகையான போட்டிகளுக்குமான ஒப்பந்தங்களையும் வழங்கி கௌரவித்துள்ளது

இதேவேளை, இம்முறை இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் 10 வீரர்களுக்கு டெஸ்ட் ஒப்பந்தமும், 12 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது

10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் வரவுள்ள ஐ.சி.சி நடுவர்கள்

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான்….

இதில் அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வருகின்ற ரொரி பேர்ன்ஸ் மற்றும் ஜோ டென்லி ஆகிய இருவரும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஒப்பந்தத்தில் முதல்தடவையாக இடம்பிடித்துள்ளார்.

ஆனால், அண்மைக்காலமாக பின்னடைவை சந்தித்து வருகின்ற சுழல்பந்து வீச்சு சகலதுறை வீரரான மொயின் அலி, மற்றொரு சுழல்பந்து வீச்சாளரான ஆடில் ரஷித் ஆகியோர் டெஸ்ட் போட்டி ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி மற்றும் லியெம் பிளெங்கட் ஆகியோருக்கும் இம்முறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை

டெஸ்ட் ஒப்பந்தம் பெற்ற வீரர்கள் 

ஜேம்ஸ் அண்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயஸ்ட்ரோ, ஸ்டுவர்ட் ப்ரோட், ரொர்ரி பேர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கரன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான ஒப்பந்தம் பெற்ற வீரர்கள் 

மொயின் அலி, ஜொப்ரா ஆர்ச்சர், ஜொனி பெயஸ்ட்ரோ, ஜோஸ் பட்லர், ஜோ டென்லி, இயென் மோர்கன், ஆடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க