நினைத்ததை விட, நான்கு வருடங்கள் முன்னரே உலகக் கிண்ணத்தில் ஆடுகின்றேன் – ஆர்ச்சர்

242
GETTY IMAGES

மேற்கிந்திய தீவுகளில் பிறந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக அண்மையில் சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை பெற்றுக் கொண்ட வேகப்பந்து சகலதுறை வீரரான ஜொப்ரா ஆர்ச்சர் உலகக் கிண்ணத் தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.

உலகக் கிண்ணத்தில் கலக்க காத்திருக்கும் சகலதுறை வீரர்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள ……..

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ராஜாஸ்தான் றோயல்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்த ஆர்ச்சர், இங்கிலாந்து அணிக்காக பாகிஸ்தான், அயர்லாந்து ஆகியவற்றுக்கு எதிரான தொடர்களிலும் சிறப்பாக செயற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக ஆர்ச்சர் பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயற்பட்டது இங்கிலாந்தின் உலகக் கிண்ண குழாத்திலும் இடம்பெறும் வாய்ப்பினை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

உலகக் கிண்ண இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்றது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆர்ச்சர், தனக்கு உலகக் கிண்ண வாய்ப்பு தான் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே கிடைத்திருப்பதாக கூறியிருந்தார்.

“நான் நினைத்ததை விட நான்கு வருடங்கள் முன்னமேயே (உலகக் கிண்ணத்தில்) விளையாடுகின்றேன்.”

ஜொப்ரா ஆர்ச்சர் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து குழாத்தில் உள்வாங்கப்பட்ட காரணத்தினால், உலகக் கிண்ணத்திற்கான உத்தேச இங்கிலாந்து குழாத்தில் பெயரிடப்பட்ட பந்துவீச்சு சகலதுறை வீரரான டேவிட் வில்லிக்கு இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிக்க ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய அனுபவம் உதவியாக இருக்கும் என ஆர்ச்சர் குறிப்பிட்டார்.

“என்னை ஒரு கிரிக்கெட் வீரராக வளர்த்துக்கொள்ள ஐ.பி.எல். போட்டிகள் முக்கிய பங்களிப்பு செய்தது. அதில் நீங்கள் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக நீண்ட காலம் விளையாட வேண்டி வரும். என்னைப் பொறுத்தவரையில் உலகக் கிண்ணம் வீரர் ஒருவருக்கு கொடுக்கும் சவாலை எதிர்கொள்ள ஐ.பி.எல். போட்டிகள் தயார்படுத்துகின்றது.”

ஆஸி. வீரருக்கு பந்து வீசுவதற்கு பயிற்றுவித்த லசித் மாலிங்க

இதேநேரம் இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில் நெருக்கடி ஏற்படுத்தக் கூடிய துடுப்பாட்ட வீரர்கள் யார்? என்பது பற்றி ஜொப்ரா ஆர்ச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

“என்னைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், கோஹ்லி, வோர்னர் ஆகியோர் கவனிக்கத்தக்கவர்கள். ஜோஸிற்கு நீங்கள் வீசும் சிறந்த பந்தினை மைதானத்திற்கு வெளியே அடிக்க முடியும். ஆனால், மற்றைய இருவரும் வேறுவிதமானவர்கள். கோஹ்லி போட்டிக்கு முன்னரே நீங்கள் எங்கு பந்துவீசபோகின்றீர்கள் என்பதை அறிந்து வைத்திருப்பார். அவர் எதிரணிகளை நிலைகுலையச் செய்யக் கூடிய ஒருவர். வோர்னரை விட பந்தினை அழுத்தமாக அடிக்கும் வேறு ஒருவர் இருப்பதாக எனக்குத் தெரியாது. அவர் உண்மையில் (எதிரணிகளுக்கு) பெரிய சவால்காரர். அதோடு, அவர் ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பின்னர் (உலகக் கிண்ணத்திற்காக) வந்திருக்கின்றார்.”

அதோடு ஜொப்ரா ஆர்ச்சர் உலகக் கிண்ணப் போட்டிகளில் தான் பந்துவீசும் நிலை பற்றியும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

“எனக்கு எங்கு தேவையாக இருக்கின்றதோ அங்கே பந்துவீச முடியும். இணைப்பாட்டங்களை தகர்க்கும் (போட்டியின் மத்திய) சந்தர்ப்பங்களில் நான் பந்துவீசினால் நன்றாக இருக்கும் என பேச்சுக்கள் வருகின்றது. ஆனால், எந்த நிலையில் பந்துவீசுவது என்றாலும் எனக்கு பரவாயில்லை.” என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<