ஆஷஷ் தொடருக்கான அவுஸ்திரேலியா கிரிக்கெட் குழாத்தில் புதுமுக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜிம்மி பீரிசன் இணைக்கப்பட்டுள்ளார்.
ஆஷஷ் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெற்றுள்ள ஜோஷ் இங்லிஷ், முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
>> இலங்கை – ஆப்கான் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்
இவ்வாறான நிலையில் முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து ஜிம்மி பீரிசன் அணியில் இணைந்துகொள்வார் எனவும், ஜோஷ் இங்லிஷ் தொடரின் இறுதிப்பகுதியில் மீண்டும் அணியுடன் இணைவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக அலெக்ஸ் கெரி செயற்பட்டுவரும் நிலையில், அவருக்கான மாற்றீடு வீரராக ஜோஷ் இங்லிஷ் அணியில் தக்கவைக்கப்பட்டிருந்தார்.
தற்போது முதல் போட்டியுடன் ஜோஷ் இங்லிஷ் நாடு திரும்புவதால் அலெக்ஸ் கெரிக்கு மாற்றீடு வீரராக ஜிம்மி பீரிசன் செயற்படவுள்ளார். ஜிம்மி பீரிசன் முதற்தர போட்டிகளில் சிறப்பாக ஓட்டங்களை குவித்துள்ளார். இவர் 6 சதங்களுடன் 34.75 என்ற ஓட்ட சராசரியில் 3000 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், இறுதியாக இலங்கை A அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் சதமொன்றையும் விளாசியிருந்தார்.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மாதம் ஆரம்பத்தில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய அணி, தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஷ் தொடரில் அடுத்த மாதம் 16ஆம் திகதி விளையாட ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<