உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் சுப்பர் ஓவரை பார்த்து கொண்டிருந்த நேரத்தில், நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷமின் இளம் வயது பயிற்சியாளர் உயிரிழந்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஒரே அணியில் இணையும் கேன் வில்லியம்சன் மற்றும் பெய்லிஸ்
ஐசிசி உலகக் கிண்ணத்தை வென்ற ………….
உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவிற்கு இம்முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. போட்டி சமநிலையில் முடிந்து சுப்பர் ஓவர் வரை சென்றது. அத்துடன் முடியாமல், சுப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 15 ஓட்டங்களை எடுக்க சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிவடைந்தது.
இதன்படி, ஐசிசி விதிகளின் படி அதிக பௌண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதுஇவ்வாறிருக்க, உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் ஜிம்மி நீஷமின் பாடசாலைக்கால பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கோர்டன், சுப்பர் ஓவரின் போது உயிரிழந்துள்ளார். நீஷம் சுப்பர் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த அந்த தருணத்தில் கோர்டனின் உயிர் பிரிந்ததாக அவரது மகள் கூறியுள்ளார்.
போட்டியின் கடைசி ஓவரின் போது அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சுப்பர் ஓவரின்போது ஜிம்மி நீஷம் சிக்ஸர் அடித்த சில நொடிகளில் அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.
ஐந்து வாரங்களுக்கு முன்பாக கார்டனுக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டு நிலைமை மோசமாகியுள்ளது. இதனால் அவருடைய மகள் லியோனி குடும்பத்துடன் அவரை பார்க்க வந்துள்ளார்.
தனது பதவியில் நீடிக்கப்போவிதில்லை என்கிறார் இன்சமாம் உல் ஹக்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ……..
நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்வதைப் பார்ப்பதற்காகத்தான் நீங்கள் உயிரோடு உள்ளீர்கள் என்று அவரது மகள், கார்டனைக் கிண்டல் செய்திருக்கிறார். அதைப் போலவே இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது. ஆனால் நீஷமின் சிக்ஸரோடு அவரது உயிர் பிரிந்துள்ளது.
ஆக்லாந்து கிரெமர் பாடசாலையில் ஆசிரியராகவும், நீஷமிற்கு விளையாட்டு பயிற்சியாளராகவும் கோர்டன் இருந்துள்ளார். 25 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் மற்றும் ஹொக்கி பயிற்சியாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.
தன்னுடைய பள்ளி பயிற்சியாளர் கார்டன் உயிரிழந்தது குறித்து ஜிம்மி நீஷம் தன்னுடைய டுவிட்டரில், டேவிட் ஜேம்ஸ் கோர்டன், என்னுடைய பாடசாலை ஆசிரியர், பயிற்சியாளர் மற்றும் நண்பர். கிரிக்கெட்டின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது. உங்களுக்கு கீழ் பயிற்சி எடுத்துக் கொண்டது எங்களது அதிஷ்டம். போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளீர்கள். நீங்கள் நிச்சயம் பெருமை அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி. உங்களுக்கு எனது இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்ததில் முக்கிய பங்கு செலுத்திய லுக்கி பெர்குசனுக்கும் இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<