டெஸ்ட் கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் டெய்லர்

876

மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோமி டெய்லர் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 13 வருடங்களாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெரோமி டெய்லர் 34.46 என்ற பந்துவீச்சு சராசரியில்130 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு  பெற்றாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான ஜெரோமி டெய்லர் இறுதியாக இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணியோடு இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விளையாடி இருந்தார். அத்தோடு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் பங்குபெறவில்லை என அறிவித்துவிட்டு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

துல்லியமாக  மற்றும் அருமையாக அவுட்ஸ்விங்கர் பந்து வீசும்  ஆற்றல் கொண்ட ஜெரோமி டெய்லர் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்ததன் காரணமாக  2003ஆம் ஆம் தனது 18ஆவது வயதில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது சர்வேதேச டெஸ்ட் அரங்கில் கால் பதித்தார். அதன் பின் இடைக்கிடை உபாதைகளுக்கு முகங்கொடுத்ததனால் அவரால் தொடர்ந்து அணியில் நீடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அவர்  2009 தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில் அவர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

டெஸ்ட் போட்டிகளில் ஜெரோமி டெய்லர்

பந்துவீச்சு
விளையாடிய போட்டிகள் – 46
பந்துவீசிய இனிங்ஸ்கள் – 78
விக்கட்டுகள் – 130
பந்துவீச்சு சராசரி – 34.46
ஓட்ட விகிதம் – 3.46
சிறந்த பந்துவீச்சு- 47/6
ஸ்ட்ரைக் ரேட் – 59.6

துடுப்பாட்டம்
துடுப்பாடிய இனிங்ஸ் – 73
ஓட்டங்கள் – 856
அதிக ஓட்டம் – 106
துடுப்பாட்ட சராசரி – 12.96
100/50 – 1/1

அறிமுக டெஸ்ட் போட்டி – 2003ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக
கடைசி டெஸ்ட் போட்டி – 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்