தென்னாபிரிக்க உள்ளூர் டி-20 தொடரில் பிரகாசிக்கும் ஜீவன் மெண்டிஸ்

1305
Image Courtesy - MSLT20 official Twitter

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை ஒழுங்கு செய்துள்ள ம்சான்ஸி சுபர் லீக் (MSL T-20) டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.  இதில் ஸ்வானே ஸ்பார்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான ஜீவன் மெண்டிஸ், இதுவரை நடைபெற்ற 13 லீக் ஆட்டங்களின் முடிவில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக இடம்பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்க உள்ளூர் T20 தொடரில் விளையாடவுள்ள ஜீவன் மெண்டிஸ்

ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தவிதத்தில் ….

.பி.எல் போட்டிகளை ஒத்தவகையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை நடாத்தும் இப்போட்டித் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. இயன் மோர்கன், கிறிஸ் கெயில், டுவெய்ன் பிராவோ மற்றும் ரஷித் கான் உள்ளிட்ட உலகின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களும் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர்.

இதுஇவ்வாறிருக்க, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான ஏபி டி.வில்லியர்ஸ் தலைமையிலான ஸ்வானே ஸ்பார்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற ஜீவன் மெண்டிஸ், இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.

இதேநேரம், நெல்சன் மன்டேலா பாய் ஜயன்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவு செய்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, டர்பன் ஹீட் அணிக்கெதிராக 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பார்ல் ரோக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ஜீவன் மெண்டிஸ், இறுதியாக கடந்த 28ஆம் திகதி ஜோசி ஸ்டார்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து A, அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிகள்

அயர்லாந்து A அணியும், 19 வயதுக்கு ….

இதேவேளை, கேப் டவுன் ப்லிட்ஸ் அணியின் அண்ட்ரிச் நொட்ஜே மற்றும் ஸ்வானே ஸ்பார்டன்ஸ் அணியின் லூதோ சிபம்லா ஆகிய வீரர்கள் தலா 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதுவரை 143 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான ஜீவன் மெண்டிஸ் அவற்றில் மொத்தமாக 95 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதோடு 3 அரைச்சதங்களுடன் 1,971 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, சுமார் 5 வருட கால இடைவெளியின் பின்னர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு டி-20 தொடரிற்கான இலங்கை குழாத்திலும் அவர் இடம்பெற்று விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<