இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாமில் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் சேர்க்கப்படாது போனமைக்காக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன தனது அதிருப்தியை டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்
இந்தியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் வெளியிடப்பட முன்னர். நவம்பர் 2 ஆம் திகதி தனது டுவிட்டர் கணக்கில் மஹேல ஜயவர்தன, “ குசல் மெண்டிஸ் எப்படி டெஸ்ட் குழாத்தில் அடக்கப்படாது போனார் என்பது தெரியவில்லை. அவர் விளையாடாவிட்டாலும் இந்தியாவில் இருக்க வேண்டும். அப்படியாக நடந்தால் மாத்திரமே இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டு மெண்டிஸ் இலங்கை அணியில் உள்ளடக்கப்படாது போனதற்கான தனது கவலையை வெளியிட்டிருந்தார்.
Don’t understand how @KusalMendis1 is not in the test squad? Even he is not playing should be in India. That’s how young players learn.
— Mahela Jayawardena (@MahelaJay) November 3, 2017
குசல் மெண்டிஸ் கடந்த வருடம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராகப் பெற்றுக்கொண்ட அபார சதம் (176) மூலம் அனைவராலும் அறியப்பட்டிருந்தார். அதோடு மெண்டிசின் மேம்படுத்தப்பட்ட ஆட்டம் மூலம் இலங்கை கிரிக்கெட் அணி அப்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியினை 3-0 என டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியொன்றினையும் பதிவு செய்திருந்தது.
தற்போது நிறைவடைந்திருக்கும் பாகிஸ்தான் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மெண்டிஸ் 10, 18, 1, 29 ஆகிய ஓட்டங்களைப் பெற்று மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இருந்த போதிலும் கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இலங்கை பலோவ் ஓன் முறையில் ஆடியிருந்த போது மெண்டிஸ் 110 ஓட்டங்களினைக் குவித்திருந்ததுடன் திமுத் கருணாரத்னவுடன் இணைந்து 191 ஓட்டங்களினை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து அணிக்கு பக்கபலமாகக் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெண்டிசின் இந்த சதத்தினையும் பாராட்டியிருந்த ஜயவர்தன, அவர் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் குழாத்தில் இருக்க வேண்டிய அவசியத்தினையும் தனது முன்னைய டுவீட்டுக்கு (குசல் மெண்டிஸ் நீக்கப்பட்டது தொடர்பாக) வந்த எதிர்க்கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும் போது குறிப்பிட்டிருந்தார்.
I am sorry.. when he scored one of the best hundreds against India and that was 3 test matches ago..looks like u have not been watching ? https://t.co/Inql72bqBK
— Mahela Jayawardena (@MahelaJay) November 3, 2017
மஹேலவின் டுவீட்டுக்கு வந்த எதிர்க்கருத்து “ மெண்டிஸ் நீக்கப்பட்டது சரியே, அவருக்கு போதுமான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரது அளவுகடந்த நம்பிக்கைக்கு (மெண்டிஸ்) அவர் தொடர்பான இந்த முடிவு சரியானதே. இன்னும் அவர் எல்லோராலும் சிறிதாக அளவு கடந்து நம்பப்படுகின்றார் என்றும் நினைக்கின்றேன் “
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் A ஒரு நாள் தொடர் சமநிலையில் நிறைவு
மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகபூர்வமற்ற…
குறித்த எதிர்க்கருத்துக்கு மஹேலவின் பதில் – “ என்னை மன்னியுங்கள்.. அவரது மிகச்சிறந்த சதம் ஒன்று இந்திய அணிக்கெதிராகப் பெறப்பட்டிருக்கின்றது. அது வெறும் மூன்று போட்டிகள் முன்னராகத்தான் நடந்திருக்கின்றது. நீங்கள் அதனை கவனிக்காதது போலத் தெரிகின்றது. “
தற்போது இலங்கை டெஸ்ட் அணியில் வெற்றிடமாகியிருக்கும் மெண்டிசின் இடத்தினை கடந்த இரண்டு வருடங்களிலும் வெறும் 4 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் ஆடி 94 ஓட்டங்களை குவித்து 13.42 என்கிற ஓட்ட சராசரியினைக் காட்டிய லஹிரு திரிமான்ன பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குசல் மெண்டிசின் நீக்கம் தொடர்பான மஹேல ஜயவர்தனவின் நிலைப்பாடு சரியா? உங்களது கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்.