மஹேல ஜயவர்தனவிற்கு புதிய பதவி

2855

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தினுள் வருகின்ற அனைத்து அணிகளதும் கிரிக்கெட் ஆட்டதிறன் (Performance) குறித்து சர்வதேச தலைமை அதிகாரியாக (Global Head) இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

உலகத்தரமான வீரர்கள் இல்லை! ; இலங்கை கிண்ணத்தை வென்றது எப்படி?

அதன்படி தனது புதிய பொறுப்பு மூலம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்கு உரிமையாகவிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி (IPL), ஐக்கிய அரபு இராச்சிய T20 லீக் தொடரில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி மற்றும் தென்னாபிரிக்க T20 லீக் தொடரில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி ஆகியவற்றுக்கு தனது புதிய பொறுப்பு மூலம் மஹேல ஜயவர்தன அவற்றின் பயிற்றுவிப்பு மற்றும் அணிகளுக்கான வீரர்கள் உள்வாங்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்திய கிரிக்கெட் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஸஹீர் கான் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தினுடைய ஆளுகையில் வரும் மூன்று அணிகளுக்கும் கிரிக்கெட் விருத்தி தலைமை அதிகாரியாக செயற்படவிருக்கின்றார்.

இதேநேரம் மஹேல ஜயவர்தன புதிய பொறுப்பு ஒன்றினை பெற்றிருக்கும் நிலையில் இந்திய பிரீமியர் லீக் தொடரில் பங்கெடுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, அவர்களுக்கான புதிய தலைமைப் பயிற்சியாளர் ஒருவரினை அறிவிக்கும் என ESPN செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வந்த மஹேல ஜயவர்தன, அவ்வணி மூன்று தடவைகள் சம்பியன் பட்டம் வெல்வதற்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் தனது புதிய பொறுப்பு குறித்து வெளியிட்டிருக்கும் மஹேல ஜயவர்தன, தனது புதிய பொறுப்பு குறித்து சந்தோசமடைவதாக தெரிவித்திருக்கின்றார்.

மறுமுனையில் ஸஹீர் கானும் புதிதாக கிடைத்த பதவி தொடர்பில் சந்தோசம் கொள்வதாக தெரிவித்திருக்கின்றார்.

சனத் ஜயசூரியவின் அதிரடி பந்துவீச்சுடன் இலங்கை லெஜன்ட்ஸ் வெற்றி

அதேவேளை மும்பை இந்தியன்ஸ் அணி புதிதாக கொள்வனவு செய்துள்ள அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் பங்கெடுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் T20 லீக் தொடர் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளதோடு, மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் பங்கெடுக்கும் தென்னாபிரிக்காவின் SA20 என்னும் பெயரிலான T20 லீக் தொடர் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<