எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதலாவது இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்தார் மலையேறும் வீராங்கனையான ஜயந்தி குரு உடும்பல. நேற்று முன் தினம் மதியமளவில் இவர் எவரெஸ்ட் உச்சியை அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதே வேளை ஜயந்தியுடன் பயணமான மற்றொரு மலையேறும் வீரரான ஜொஹான் பீரிஸ் மலை உச்சியை அடைந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வரலாற்றில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்ற ஜயந்தி கடந்த ஏப்ரல் மாதம் பயணத்தை ஆரம்பித்தார். நான்கு கட்டங்களாக அதாவது 4 முகாம்களில் தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு மலை உச்சியை அடைய முற்பட்ட இவர்கள், கடைசி மலை உச்சிக்கான பயணத்தை கடந்த 15ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர். இந்தப் பயணத்தின் படி 20 ஆம் திகதி அவர்கள் மலை உச்சியை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் பிந்தி 21ஆம் திகதி மலை உச்சியை அடைந்திருக்கிறார் ஜயந்தி.
எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து இலங்கைக்கு பெருமை சேர்த்த ஜயந்திக்கும் அதற்கு உதவியாக சென்ற ஜொஹானுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் – வீரகேசரி
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்