இந்திய-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரத்தானதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மேலதிக T20 போட்டிகள் இரண்டில் விளையாட தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐசிசியின் ஆகஸ்ட் மாத விருதை வென்றார் ஜோ ரூட்
இந்திய – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இரத்தான போது ஏற்பட்ட வருமான இழப்பினை ஈடுசெய்யும் விதத்திலேயே, இந்திய கிரிக்கெட் அணி தாம் அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மேலதிகமாக இங்கிலாந்து அணியுடன் இரண்டு T20 போட்டிகளில் விளையாட விருப்பம் காட்டியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணி மேலதிக T20 போட்டிகள் இரண்டில் விளையாட விருப்பம் தெரிவித்த விடயத்தினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் திரு. ஜெய் ஷாஹ் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியினை பயிற்றுவிக்கவுள்ள ஹெய்டன் – பிலாந்தர் ஜோடி
அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் அணியின் விருப்பத்தினை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய – இங்கிலாந்து அணிகள் இடையில் மூன்று போட்டிகளாக இடம்பெறவிருந்த T20 தொடர் ஐந்து போட்டிகள் கொண்டதாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேநேரம் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பு விராட் கோலியிடம் இருந்து ரோஹித் சர்மாவிற்கு மாறவிருக்கின்றது என ஊடகங்களில் வெளிவரும் தகவல்களை முற்றிலும் மறுப்பதாகவும் கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<