பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவிட் உமர், ஐசிசி நடாத்தும் எந்தவொரு போட்டித் தொடரிலும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சார்பாக பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவிட் உமர் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் முகாமையாளராக கடந்த இரண்டு தொடர்களில் பணிபுறிந்திருந்தார். அதேநேரம், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரிலும், பங்களாதேஷ் மகளிர் அணியின் முகாமையாளராக செயற்பட்டிருந்தார்.
IPL கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு
இந்தியன் ப்ரீமியர்………
இந்தநிலையில், அணியின் தகவல்களை வெளிவிட்டதாக ஜாவிட் உமர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஐசிசி நடத்தும் தொடர்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சார்பாக பங்கேற்ககூடாது என கிரிக்கெட் உயர்மட்டக் குழுவால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இந்த விடயத்தினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தகவல் வெளியிட்ட அவர், “இனிவரும் எந்தவொரு தொடரிலும் அணி சார்பாக ஜாவிட் உமர் பங்கேற்ககூடாது என ஐசிசி எமக்கு அறிவுறுத்தியுள்ளது. உண்மையாக இந்த விடயம், எமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறத” என்றார்.
ஜாவிட் உமரின் நடத்தைகளை தொடர்ந்து ஐசிசியின் அதிகாரிகள் அவதானித்து வந்துள்ளனர். பின்னர், அவருக்கு எதிராக ஆதரங்களை சேகரித்துக்கொண்டு, ஐசிசியின் தொடர்களில் இருந்து அவரை வெளியேற்றுமாறு அறிவித்துள்ளது.
ஜாவிட் உமர் பங்களாதேஷ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 59 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1995ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய இவர், அந்த அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருந்துள்ளார். மிகச்சிறந்த துடுப்பாட்ட நுணுக்கங்கள் இருந்த போதும், ஒருநாள் போட்டிகளில் வேகமாக ஓட்டங்களை குவிக்க தடுமாறியமை அவரது பின்னாள் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<