நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து முன்னணி வீரருக்கு ஓய்வு

England tour of India 2024

273
England tour of India 2024

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலைப்பெற்றுள்ளது.

>>பயிற்சியின் போது உபாதைக்குள்ளான பங்களாதேஷ் பந்துவீச்சாளர்<<

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80.5 ஓவர்கள் பந்துவீசியுள்ள ஜஸ்ப்ரிட் பும்ரா, 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் உள்ளார்.

இந்தநிலையில் ராஞ்சியில் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு ஓய்வு வழங்க இந்திய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதுடன், நான்காவது போட்டி முடிவின் அடிப்படையில் ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பது உறுதிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் வீரர்கள் ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையில், ஜஸ்ப்ரிட் பும்ரா அஹமதாபாத் சென்றுள்ளதாகவும், அணியுடன் இணைந்துக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<