மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, இந்தியா சார்பாக குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்றும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்றும் வென்றது. இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி அண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில இந்திய அணி 297 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவிக்கும் பாகிஸ்தான் வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு அடுத்த மாத…..
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய வேகப்பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், மொஹமட் ஷமி, பும்ராஹ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க, இப்போட்டியில் பும்ராஹ் டெரன் பிராவோவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் தனது 50 ஆவது விக்கெட்டை பதிவு செய்தார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் இந்தியா சார்பாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அடுத்த இடங்களில் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் மொஹமட் ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான் மற்றும் ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்), காவ்ரி மற்றும் கபில் தேவ் (16 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
அதேபோல ஒட்டுமொத்த இந்திய பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம்பிடித்துள்ளார். இதில் அஷ்வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளனர்.
RCB அணியின் பயிற்சியாளரில் அதிரடி மாற்றம்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) T20 போட்டிகளில் ஆடும் பெங்களூர்…..
அத்துடன், இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவதற்கு பும்ரா 2465 பந்துகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அஷ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்டுகளை சாய்த்து இரண்டாம் இடத்திலும், காவ்ரி (2606 பந்துகள்), உமேஷ் யாதவ் (2694 பந்துகள்), மொஹமட் ஷமி (2753 பந்துகள்) அடுத்த இடங்களில் உள்ளனர்.
2018 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். அத்துடன், டெஸ்ட் தரவரிசையில் 16 ஆவது இடத்தில் உள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<