டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
இந்தியா–இங்கிலாந்து இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. அத்துடன், லண்டன் ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வெற்றியீட்டிமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றது இந்தியா
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களையும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சகல விக்கெட்டுகளையும் இழந்து 466 ஓட்டங்களை எடுத்தது.
இந்த நிலையில், போட்டியின் கடைசி மற்றும் 5வது நாளான நேற்று தமது இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. இதில், ஒல்லி போப் 2 ஓட்டங்களுக்கு பும்ராவின் பந்தில் போல்டானார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுக்கொண்டார். இந்த மைல்கல்லை அவர் 24ஆவது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்தியாவின் முன்னாள் தலைவர் கபில் தேவ் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், பும்ரா 24 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 3ஆவது இடத்தில், இர்பான் பதான் (28 டெஸ்ட் போட்டிகள்) உள்ளார்.
ICC இன் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர்கள் அறிவிப்பு
மொஹமட் ஷமி (29), ஜவகல் ஸ்ரீநாத் (30), இஷாந்த் சர்மா (33), கார்சன் காவ்ரி (36), சஹீர் கான் (37), உமேஷ் யாதவ் (37) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதேபோன்று, சுழல் பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 18 போட்டிகளில் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த இந்திய வீரராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<