பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் பும்ரா!

Indian Premier League 2025

25

IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யபட்டிருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா உபாதையிலிருந்து மீண்டு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார். 

முதுகுப்பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ரா இறுதியாக நடைபெற்றுமுடிந்த ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணத்தில் விளையாடவில்லை. 

இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்னாபிரிக்க, மேற்கிந்திய தீவுகளின் சவால்

உபாதை காரணமாக தொடர்ச்சியாக சிகிச்சைகள் மற்றும் உபாதையிலிருந்து மீளுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா முழுமையாக குணமடைந்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

அதேநேரம் நேற்று முன்தினம் (5) ஜஸ்ப்ரிட் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துக்கொண்டுள்ளதுடன், இன்று (7) நடைபெறவுள்ள றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளார் எனவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<